தமிழகத்தில் முதல் முறையாக மின்சாரம் தயாரிக்க புதிய முறையை கையாண்ட கோவை மாநகராட்சி… என்னென்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

By Meena

Published:

மின்சாரம் மிகவும் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் எதுவுமே இங்கு இயங்காது. மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல வழிகள் இருக்கிறது. மின்சாரத்தை முடிந்த வரை சேமிக்க வேண்டும் தேவை இல்லாமல் வீணாக்க கூடாது என்று அரசாங்கம் அறிவுறுத்துகிறது.

தற்போதைய காலகட்டத்தில் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல்களை வைத்து சூரியளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பிரபலமாகிக் கொண்டு வருகிறது. மத்திய அரசும் ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் சோலார் பேனலை அமைத்து மின்சாரம் சேமிக்க மானியமும் வழங்குகிறது.

மத்திய அரசு மானியத்தின் மூலம் ஒருவர் தங்களது வீட்டின் மேலே சோலார் பேனல்களை வைத்து விட்டால் அதனால் வரும் மின்சாரத்தை தங்கள் வீட்டில் பயன்படுத்தும் போது அவர்கள் தனியாக மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. இதனால் பணம் சேமிக்க முடியும் என்பதை தான் அரசாங்கம் கூறுகிறது.

இதே போல சோலார் பேனர்களை வைத்து மின்சாரம் தயாரிக்கும் முறையை புதிய வழியில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது கோவை மாநகராட்சி. அது என்னவென்றால் கோவை மாவட்டம் உக்கடத்தில் அமைந்துள்ள பெரிய குளத்தில் சோலார் பேனல்களை மிதக்க விட்டு அதன் மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் பணி தொடங்கி இருக்கிறது.

இதன் மூலம் 1400 ஹைபர் ஓல்ட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று கோவை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. இதுபோல குளத்தில் சோலார் பேனல்ளை மிதக்க விட்டு மின்சாரத்தை தயாரிப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த முடியுமா என்று தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.