இளநீர் வியாபாரம் என்பது தெரு ஓரங்களில் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு தொழிலாக இருக்கும். ஆனால், நான் இதில் ஏஐ உதவியுடன் ஒரு புதிய செயலியை அமைத்து, மாற்றாக யோசித்த தொழிலதிபர் இலட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
இளநீர் வியாபாரம் நல்ல லாபம் தரும் தொழில் என்றாலும், இளநீர் வியாபாரிகளுக்கு கொள்முதல் செய்வது மற்றும் அதை கழிவு இல்லாமல் விற்பனை செய்வது என்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். சிறிய கடைக்காரர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப வாங்க முடியாது; மொத்தமாக வாங்கினால், சில நாட்களில் அந்த இளநீர் சுவை இழப்பதோடு தரத்தையும் பாதிக்கிறது.
இந்த பிரச்சனைகளை சரியாக கண்டுபிடித்த Dailygurus என்ற நிறுவனம் இதற்கு ஒரு தீர்வை அளித்துள்ளது. இந்த நிறுவனம் ஒரு செயலியை வடிவமைத்து, அதன் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு இளநீர் சப்ளை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், வியாபாரிகள் வாரம் ஒருமுறை மொத்தமாக வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல், தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாங்கிக்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு ஒருவர் 500 இளநீர் விற்பனை செய்தால், அதே அளவு அவர் வாங்கிக்கொள்ளலாம். செயலியின் மூலம் அவர் ஆர்டர் கொடுத்தால் போதும்; அவர் இருக்கும் இடத்திற்கு நேரடியாக டோர் டெலிவரி செய்யப்படும். இதனால், இளநீர் விற்காமல் இருந்தாலும் பெரிய அளவில் ஸ்டாக் இருக்காது, கழிவுகள் குறையும். மேலும் தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி விற்பதால் புரோக்கர்களின் கமிஷன் எதுவும் கிடையாது.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் செயல்படும் இந்த செயலியின் மூலம், சின்னச் சின்ன வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான அளவு ஆர்டர் செய்து, குறைந்த நேரத்திலேயே இளநீர்களை பெற்றுக்கொள்ளலாம். ஆர்டர் பெற்ற சில மணி நேரத்திற்குள், அவர்களது கடைக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. எனவே, கொள்முதலுக்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை.
வழக்கத்தை விட சிறப்பாக வியாபாரம் நடைபெறுவதாக இளநீர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இளநீர் வியாபாரத்தில் மாற்று யோசித்த Dailygurus நிறுவனம், லட்சக்கணக்கான இளநீரை தினமும் விற்பனை செய்து, பெரும் லாபத்துடன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
