முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் அரசு முறைப் பயணமாக பல்வேறு நலத்திட்டங்களைத் துவங்கி வைக்க சென்றிருக்கிறார். நேற்று கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள எல்காட் புதிய ஐடி வளாகத்தினைத் துவக்கி வைத்தார். ரூ. 158.32 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் தகவல் தொழில்நுட்ப வளாகத்தின் மூலம் 3500 ஐடி வேலை வாய்ப்பு உருவாகும்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசு விழாக்களில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் பொற்கொல்லர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கோவை அனுப்பர் பாளையத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் மேடையேறும் போது கல்லூரி மாணவர்கள் கடவுளே அஜீத்தே என முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய் பேசும் போது அஜீத் ரசிகர்கள் கடவுளே அஜீத்தே என கோஷமிட்டனர். இந்த வீடியோ டிரெண்டிங் ஆனது.
தொடர்ந்து வந்த எதிர்ப்புக் குரல்.. தாதா லாரன்ஸ் பிஷ்னோய் டி-சர்ட்டை நிறுத்திய மீஷோ
இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பங்கேற்ற அரசு விழாவிலும் இதுபோன்ற கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் துணை முதலமைச்சர் ஸ்டாலின் அஜீத் துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ள அஜீத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது கார்பந்தய நிகழ்வுகளுக்கு பயன்படுத்தியதற்கு நன்றியும் தெரிவித்தார். மேலும் சில அமைச்சர்களும் அஜீத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
தற்போது கடவுளே அஜீத்தே.. என்ற கோஷம் இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகிறது.