வெளியான தங்கலான் டீசர் : பாம்பை இரண்டாகப் பிளந்து மிரள வைத்த சீயான் விக்ரம்

இந்த வருடம் சீயான் விக்ரமுக்கு திருப்புமுனையான வருடம் என்றே சொல்லாம். தொடர் சரிவில் இருந்த விக்ரமுக்கு பொன்னியின் செல்வன் 1,2 பாகங்கள் வெளியாகி சீயான் விக்ரமுக்கு கம்பேக் கொடுத்தது. இதனையடுத்து கடந்த 6 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த துருவநட்சத்திரம் ரிலீசுக்கு தயாரான நிலையில் டிரைலர் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் லெஜண்ட் படத்திற்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துருவ நட்சத்திரத்தின் பாடல்கள் அயன் படம் போன்று சூப்பராக வந்துள்ளது. நடிப்பில் பிஸியான கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்குப்பிறகு அவர் இயக்கத்தில் ரிலீசாகும் அடுத்த படம் இது.

தங்கலான் டீசர்

இந்நிலையில் சீயான் விக்ரம், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். தற்போது ஷுட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகும் தருவாயில் இருக்கிறது. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சீயான் விக்ரமின் தோற்றம் புல்லரிக்க வைத்தது. சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படத்திற்குப் பின் பா.ரஞ்சித் இயக்கும் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

Thangalaan 1

அன்னபூரணியாக நயன்தாரா : சோலோ ஹீரோயினாக இதில் கலக்குவாரா?

தற்போது இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிரளவைத்துள்ளது. பாலா இயக்கத்தில் இதுபோன்ற கேரக்டர்களில் நடித்த சீயான் விக்ரமை தற்போது பா.ரஞ்சித்தும் நன்கு பயன்படுத்திக் கொண்டார். இந்த நடிப்பு அரக்கனால் மட்டும் எப்படி இவ்வாறு நடிக்க முடிகிறது என்று கேட்கத் தோன்றும் அளவிற்கு டீசர் அமைந்துள்ளது.

இதில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நீண்ட முடியும், காட்டுவாசிகள் போன்ற தோற்றத்தில் இருக்கும் விக்ரம், டீசரின் முதல் காட்சியிலேயே நடையில் மிரட்டுகிறார். பின்னர் பாம்பைப் பிடித்து இரண்டாக உடைக்கும் காட்சியில் நம்மை வௌவௌத்துப் போக வைக்கிறார். நாடி நரம்பெல்லாம் நடிப்பு ஊறிப் போன ஒருத்தரால் தான் இப்படியெல்லாம் நடிக்க முடியும் என்னும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் டீசர் புல்லரிக்க வைக்கிறது.

Thangalaan 2

டாப் ஸ்டார் பிரசாந்தின் ரீ என்ட்ரி… கை கொடுக்குமா தளபதி 68?

மேலும் போர்க்கள காட்சியில் பாரம்பரிய போர்க்கருவிகளைக் கொண்டு ஒரு இருப்பிடத்தின் சுதந்திரத்திற்காக போராடும் காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. 2024-ம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தங்கலான் படம் வெளியாக இருப்பதால் சீயான் விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் தங்கலானை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.

2024-ல் தங்கலான் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய ஓப்பனிங் ஆகவும், விக்ரம் மற்றும் பா.ரஞ்சித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாகவும் அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.