அன்னபூரணியாக நயன்தாரா : சோலோ ஹீரோயினாக இதில் கலக்குவாரா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் அன்னபூரணி என்றால் நம்ப முடிகிறதா? தமிழில் சரத்குமார் ஜோடியாக இயக்குநர் ஹரியின் ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அப்பொழுதே இவரது திறமையைக் தமிழ் சினிமா கொண்டாட தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து, தற்போது 75வது படமான அன்னபூரணிக்கு தயாராகி விட்டார்.

பிரமாணப் பெண் வேடத்தில் ஏற்கனவே யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருந்த நயன்தாரா மீண்டும் அது போன்ற வேடத்தில் தாவணி பாவாடையில் இளம் ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு அழகு தேவதையாய் அன்னபூரணி படத்தில் ஜொலிக்கிறார்.

அதிசயமே அசந்து போகும் அழகு : 50 வயதிலும் 20 வயது இளமையில் ஜொலிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்

டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகும் அன்னபூரணி படத்திற்கு இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமன் இசையில் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நிலேஷ் இயக்கத்தில் உருவான அன்னபூரணி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படக்குழு படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது.

Nayanthara 1

மீண்டும் ஜெய், சத்யராஜ் கூட்டணி

அட்லி இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் ஜெய் ஜோடியாகவும், சத்தியராஜ் மகளாகவும் நயன்தாரா நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இதே கூட்டணி அன்னபூரணி படத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பு. ராஜாராணி படத்தில் ஜெய், நயன்தாரா காதல் காட்சிகள் இப்போது பார்த்தாலும் இளமைத் துள்ளலுடன் பிரஷ்ஷாக இருக்கும். இதனால் மீண்டும் இணையும் இந்த ஜோடியால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

Raja Rani

ஏற்கனவே நயன்தாரா தனியாக ஹீரோயினாக அதாவது கதையின் நாயகியாக நடித்த அறம், நெற்றிக்கண், ஐரா, கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் அவரது நடிப்புக்குத் தீனி போட்ட நிலையில் மீண்டும் சோலோவாக கதையின் நாயகியாக அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார்.

50-வது படத்திற்கு தயாராகும் சிம்ரன் : அறம் இயக்குநருடன் இணையும் இடுப்பழகி

இவற்றில் அறம் திரைப்படம் இவருக்கு சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க கோலமாவு கோகிலா காமெடியிலும் ஒர்க்அவுட் ஆனது. இதேபாணியில் காதுகேளா மாற்றுத்திறனாளியாக நடித்த நானும் ரவுடிதான் திரைப்படமும் நயன்தாராவின் நடிப்பை போற்றும் திரைப்படங்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews