6 மனைவிகள்.. 14 காதலிகள்.. 20 பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி.. போலீசிடம் சிக்கி 13 ஆண்டுகள் சிறை தண்டனை..!

சீனாவை சேர்ந்த 34 வயது லியு என்ற நபர், ஐந்து முன்னாள் மனைவிகள் மற்றும் 14 தோழிகள் என மொத்தம் 20 பெண்களிடம் இருந்து ரூ.2.3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், 13…

fraud

சீனாவை சேர்ந்த 34 வயது லியு என்ற நபர், ஐந்து முன்னாள் மனைவிகள் மற்றும் 14 தோழிகள் என மொத்தம் 20 பெண்களிடம் இருந்து ரூ.2.3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மோசடி திட்டம்.. பணக்காரர் வேஷம்:

சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த லியு, கடந்த 10 ஆண்டுகளாக தன்னை ஒரு வசதியான தொழிலதிபர் போல காட்டிக்கொண்டு இந்த மோசடியை செய்துள்ளார். அவர் வாடகைக்கு எடுத்த சொகுசு கார்களுடன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

திருமணங்கள்:

2009-ல் முதல் திருமணம் செய்த அவர், அடுத்தடுத்து ஆறு பெண்களை திருமணம் செய்து, ஐந்து பேரை விவாகரத்து செய்துள்ளார். மேலும், 14 பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களிடமும் பழகி வந்துள்ளார்.

மோசடி முறை:

தனது வணிகத்தை விரிவுபடுத்துவதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி, இந்த 20 பெண்களிடமும் கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

வழக்கு மற்றும் தண்டனை

லியுவின் ஆறாவது மனைவி, அவரது மோசடி செயல்களை கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், அவர் இதற்கு முன்பு திருமணம் செய்த ஐந்து மனைவிகள் மற்றும் 14 பெண் தோழிகளிடமும் பணம் வாங்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இன்னும் எத்தனை பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.