வாகனங்களில் சீன சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களுக்கு தடை.. அமெரிக்கா ஆலோசனை..!

By Bala Siva

Published:

 

அமெரிக்காவில் உள்ள ஏராளமான வாகனங்களில் சீனாவின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை தடை செய்ய அமெரிக்க அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்காவில் உள்ள வாகனங்களில் சீனாவின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் தடை செய்ய உள்ளதாகவும், இதற்கான வழிமுறைகளை அமெரிக்க அரசு தற்போது ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள ஓட்டுனர்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கான தகவல்களை சீன அரசு இந்த சாப்ட்வேர் மூலம் பெற்றுக் கொள்கிறது என்பதும், இந்த தகவல் சேகரிப்பு அமெரிக்காவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சீனாவில் இருந்து முக்கிய தகவல் தொடர்பு மற்றும் தானியங்கி ஓட்டுநர் அமைப்புக்கான மென்பொருள் மற்றும் ஹார்டுவேர்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்க ஆலோசிக்கப்படுகிறது.

சீனாவின் சாப்ட்வேர்கள் மற்றும் ஹார்டுவேர்கள் அபாயங்கள் உடையவை எனவும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் வாகனங்களுக்கு பெரும் ஆபத்துகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்ததும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்கள் தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.