சிக்கன் 65 ஆர்டர் செய்தவருக்கு ரூ.50,000 நஷ்டம்.. எப்படி எல்லாம் யோசிக்குறாங்க…!

  ஆன்லைனில் சிக்கன் 65 ஆர்டர் செய்த ஒருவருக்கு 50,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் மோசடி செய்பவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, புதிய முறையில் மோசடி செய்து வருகிறார்கள். எனவே, விழிப்புடன்…

chicken

 

ஆன்லைனில் சிக்கன் 65 ஆர்டர் செய்த ஒருவருக்கு 50,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் மோசடி செய்பவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, புதிய முறையில் மோசடி செய்து வருகிறார்கள். எனவே, விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.

சமீபத்தில், பிரபல அசைவ உணவகம் ஒன்றின் விளம்பரம் ஆன்லைனில் வெளியானது. அந்த விளம்பரத்தில், சலுகை விலையில் சிக்கன் உள்பட அனைத்து வகை பொருட்களையும் வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மெசேஜுடன் ஒரு லிங்கும் இணைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஒரு ஐடி ஊழியர் அந்த லிங்கை கிளிக் செய்து சிக்கன் 65 ஆர்டர் செய்தார். பின்னர், தனது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினார். உணவு வருமென்று காத்திருந்த நேரத்தில், வங்கியில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில், 50,000 ரூபாய் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால், கடைசி வரை ஆர்டர் செய்த உணவு வரவில்லை. உடனே சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு தொடர்பு கொண்டபோது, “இது போலியான மெசேஜ், நாங்கள் எந்த சலுகையும் அறிவிக்கவில்லை” என்று அவர்கள் கூறினர்.

பிரபல நிறுவனங்களின் பெயரில் சலுகை அறிவித்து மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற மோசடி மெசேஜ்கள் வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மெசேஜுடன் வரும் லிங்குகளை கிளிக் செய்யக்கூடாது.

எந்தவொரு சலுகை அறிவிப்பும் வந்தாலும் அது உண்மையா என்பதை உறுதிப்படுத்த, அந்த நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், ஆர்டர் செய்யும் முறையை அவர்களிடம் கேட்டறிந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு, மோசடியாக வந்த மெசேஜ்களில் உள்ள லிங்குகளை கிளிக் செய்து பணத்தை இழக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.