காஷ்மீரில் தற்போது தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ள நிலையில், ஏராளமான மக்கள் காஷ்மீரின் அழகை கண்டு களிக்க சுற்றுலா சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் ஹனிமூன் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. இந்த சுற்றுலா பேக்கேஜுக்கு “காஷ்மீர் ஹெவன் ஆன் எர்த்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் காஷ்மீரில் தங்கி, காஷ்மீரில் உள்ள அழகிய இடங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்த்து இன்பமடையலாம்.
சென்னையில் இருந்து தொடங்கும் இந்த டூர் பேக்கேஜில், சென்னையில் இருந்து நேரடியாக காஷ்மீருக்கு விமானத்தில் பயணம் செய்யலாம். காஷ்மீரில், சுற்றுலா பயணிகள் கார்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள். காஷ்மீரில் உள்ள முக்கிய நகரங்கள், ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க் மற்றும் பஹல்காம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்வதோடு, பயணிகளுக்கான தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய ஏற்பாடுகளையும் ஐஆர்சிடிசி கவனிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டூர் பேக்கேஜின் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.56,500 ஆகும். இரண்டு பேராக ஹனிமூன் பேக்கேஜில் பயணம் செய்தால், சலுகை கிடைக்கும், மூன்று நபர்கள் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.50,500 மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
