ChatGPT ஏஐ டெக்னாலஜியில் வாய்ஸ் வசதி.. இனி குரல் மூலம் கேள்வி கேட்கலாம்..!

By Bala Siva

Published:

 

உலகம் முழுவதும் ChatGPTயின் ஏஐ டெக்னாலஜி அனைத்து துறைகளிடம் புகுந்துள்ள நிலையில் இதில் புது புது வசதிகளை அவ்வப்போது ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்து வருவது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள் முதல் சினிமா துறை வரை ஏஐ டெக்னாலஜி தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதால் மனிதர்களின் வேலை வாய்ப்புகள் கேள்விக்குறியாகி உள்ளன என்பதும் ஏஐ டெக்னாலஜியால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓபன் நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு புதிய வசதியாக குரல் மூலம் கேள்வி கேட்கலாம் என்று அறிவித்துள்ளது.

இதுவரை ChatGPTயில் டெக்ஸ்ட் மூலம் மட்டுமே கேள்விகளை எழுப்பி பதில் பெற்று வந்த நிலையில் தற்போது குரல் மூலம் கேள்வி எழுப்பலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த வசதி தற்போதைக்கு பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அனைத்து தரப்புக்கும் இந்த வசதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய வசதி மூலம் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் ஏஐ டெக்னாலஜியில் என்னென்ன வசதிகள் வரும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.