ஓபன் ஏஐ நிறுவனத்தின் உரிமையாளர் சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி, சாம் ஆல்ட்மேன், ஒலிவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எளிய முறையில் இந்த திருமணம் நடைபெற்றது.
தற்போது, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தையின் கைவிரலை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். “அவன் நன்றாக இருக்கிறான், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய அன்பை நான் இதுவரை உணர்ந்ததே இல்லை,” என்று பதிவு செய்துள்ளார்.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா உட்பட ஏராளமானோர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து, “சாட்ஜிபிடி நிறுவனத்திற்கு ஒரு ஆண் வாரிசு கிடைத்துவிட்டது” என்று நெட்டிசன்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.