எத்தனை AI வந்தாலும் என்னை அசைக்க முடியாது: ChatGPT செய்த முறியடிக்க முடியாத சாதனை..!

  சீனாவின் Deepseek AI போல் பல AI டெக்னாலஜி வந்த நிலையில் ChatGPT பங்குகள் குறைந்தது என்பதும் இதனால் ChatGPTக்கு ஆதரவு குறைந்தது என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ChatGPT செய்த முறிக்க…

chatgpt

 

சீனாவின் Deepseek AI போல் பல AI டெக்னாலஜி வந்த நிலையில் ChatGPT பங்குகள் குறைந்தது என்பதும் இதனால் ChatGPTக்கு ஆதரவு குறைந்தது என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ChatGPT செய்த முறிக்க முடியாத சாதனையை பார்க்கும்போது Deepseek உள்பட எத்தனை AI டெக்னாலஜி வந்தாலும் அதை அசைக்க முடியாது என்பது தெரிய வந்துள்ளது. அந்த சாதனை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

OpenAI நிறுவனத்தின் AI தொழில்நுட்ப அடிப்படையிலான ChatGPT செயலி, மார்ச் மாதத்தில் உலகளவில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இருந்ததாக அனலிடிக்ஸ் நிறுவமான AppFigures வெளியிட்ட புதிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 4.6 கோடி பதிவிறக்கங்களைப் பெற்ற ChatGPT, Instagram மற்றும் TikTok செயலிகளைத் தாண்டி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக, சமீபத்தில் அறிமுகமான அதன் image generation என்ற புதிய அம்சம் தான் என கூறப்படுகிறது.

AppFigures வழங்கிய விவரங்கள் படி, ChatGPT செயலி iOS பிளாட்ஃபார்மில் 1.3 கோடி பதிவிறக்கங்களையும், Android பிளாட்ஃபார்மில் 3.3 கோடியையும் பெற்று மொத்தமாக 4.6 கோடியை அடைந்துள்ளது. Instagram செயலி அதே எண்ணிக்கையை தொட்டாலும், அதன் பதிவிறக்கம் பங்கு வேறுபட்டது. அதாவது iOS-ல் 50 லட்சம், Android-ல் 4.1 கோடி பதிவிறக்கங்கள். TikTok செயலி 4.5 கோடி பதிவிறக்கங்களை (iOS – 80 லட்சம், Android – 3.7 கோடி) பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தது.

ChatGPT செயலியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அதன் Ghibli-style இமேஜ் உருவாக்கும் கருவி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால், பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் ChatGPT செயலியின் பதிவிறக்கம் 28% அதிகரித்தது. “ChatGPT, மார்ச் மாதத்தில் Instagram ஐவிட சற்று அதிகமான 46 மில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது,” என AppFigures தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

OpenAI நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் Brad Lightcap கூறுகையில், “130 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த கருவியை பயன்படுத்தி 700 மில்லியனுக்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.

இப்போது ChatGPT வெறும் உரை அடிப்படையிலான ஒரு chatbot மட்டுமல்ல; visual storytelling வசதியுடன் கூடிய ஒரு பல்துறை செயலியாக மாறியுள்ளது. AI உருவாக்கும் உள்ளடக்கங்கள் அதிக பிரபலமடைந்து வரும் நிலையில், ChatGPT போன்ற செயலிகள் உலக அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது.