ChatGPTயை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு உளவியல் கோளாறா? அதிர்ச்சி தகவல்..!

  ChatGPT என்ற ஏஐ டெக்னாலஜியை அளவோடு பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால், அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு சில உளவியல் பிரச்சனை இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெரும்…

lonely

 

ChatGPT என்ற ஏஐ டெக்னாலஜியை அளவோடு பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால், அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு சில உளவியல் பிரச்சனை இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மிகப்பெரிய பலனை அளிக்கக்கூடிய ChatGPT தொழில்நுட்பம், மனிதர்கள் கஷ்டப்பட்டு செய்யும் வேலைகளை எளிதில் செய்யும் நிலையை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், இதை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு சில உளவியல் ரீதியான பிரச்சனைகள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் 4000 பயனர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குறுகிய நேரம் ChatGPயை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் நேர்மறை அனுபவத்தை பெற்றதாக கூறினர். ஆனால், நீண்ட நேரம் ChatGPTயுடன் உரையாடியவர்கள் தாங்கள் தனிமையை அதிகமாக உணர்வதாகவும், மனித உறவையே வெறுக்கும் அளவுக்கு உளவியல் பிரச்சனை ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் கலந்துரையாடும் போது தான் உற்சாகமாக இருப்பான். ஆனால், முழுக்க முழுக்க மெஷினில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது மனிதனையும் மெஷின் தரமாக மாற்றிவிடும். ஏற்கனவே இந்த தொழில்நுட்பம் அறிமுகமானபோது எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது அது உண்மையாகிறது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதிகமாக ChatGPTயை பயன்படுத்துபவர்களுக்கு மன வலிமை குறைவு போன்ற உணர்வுபூர்வமான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், மனித சமூக உறவுகளுக்கு பதிலாக இயந்திரத்தனமான ஒரு செயலாக இது மாற்றி வருவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே ChatGPT உள்பட எந்த ஒரு டெக்னாலஜியாக இருந்தாலும் அளவுடன் பயன்படுத்தி, மனித உறவுகளுடன் கொஞ்சம் பேசுங்கள் என்பதுதான் இந்த ஆய்வு மனிதனுக்கு கூறும் உண்மையாகும்.