இதுவரை Chatgpt நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் நிலையில், இனி Chatgptயால் நமது மொபைல் கேமரா மூலம் அனைத்தையும் பார்க்க முடியும் என்றும், பார்க்கும் பொருட்களின் விவரங்களை தரும் வகையில் டேட்டாக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏஐ டெக்னாலஜியில் முன்னணியில் இருக்கும் Chatgpt நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை ஏற்படுத்தித் தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், தற்போது Chat Gpt யில் புதிய வசதி வர இருப்பதாகவும், இந்த புதிய வசதியின் மூலம் நமது மொபைல் போனின் கேமரா மூலம் நாம் அருகில் உள்ள பொருட்களை பார்த்து, அந்த பொருட்கள் குறித்த முழு விவரத்தை கூறும் வகையில் டேட்டாக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு இது நடைமுறைக்கு வரும் என்றும், தற்போது பீட்டா வெர்சனலில் சில பொருட்களை பார்க்க வைத்து அது சொல்லும் பதில்கள் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நமது மொபைல் போன் மூலம் நமது அந்தரங்கங்களையும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால், Chatgptயின் இந்த புதிய வசதி ஆபத்தானது என்றும் கூறப்பட்டு வருகிறது.