ஒரு வருடத்தில் ரூ.1000 விலையேற்றம்.. தங்கப்பத்திரம் வாங்குவதால் கிடைக்கும் பலன்கள்..!

By Bala Siva

Published:

மத்திய அரசு தங்க பத்திரம் வெளியிடும் திட்டம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்பதும் தங்கத்தில் முதலீடு செய்வதை விட தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது கூடுதல் பலன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த தங்க பத்திரம் திட்டம் பாதுகாப்பான முதலீடு திட்டம் என்றும் இந்த திட்டத்தில் தங்கத்தின் தங்கத்திற்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்படுவது மட்டுமின்றி செய்கூலி சேதாரம் என்ற எந்தவிதமான கூடுதல் செலவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தங்க பத்திரம் வெளியானபோது ஒரு கிராம் ரூ.5041 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் 19 முதல் 23 வரை தங்க பத்திரம் வாங்கிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5096 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் ஆயிரம் ரூபாய் தங்க பத்திரத்தின் விலை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 19 முதல் ஜூன் 23 வரை 5 நாட்களுக்கு தங்க பத்திரம் கிடைக்கும் என்றும் அனைத்து வங்கிகள், தபால் நிலையங்கள் ஆகியவற்றில் இதை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆன்லைன் மூலம் வாங்குபவர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்கப்பதக்கம் வாங்குபவர்கள் ஒரு சில முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும். தங்க பத்திரம் வாங்குபவர்கள் 8 ஆண்டுகள் முதிர் காலம் கழித்தே தங்கத்திற்கான மதிப்பின் பணம் கிடைக்கும். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தால் வெளியேறலாம், ஆனால் அதற்கு வருமான வரி கட்ட வேண்டும். 8 ஆண்டு கழித்து வெளியேறினால் வருமானவரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திட்டத்தின்படி நாம் வாங்கும் தங்கத்தின் மதிப்பிற்கு ஆண்டுக்கு 2.5% வட்டியை பெறலாம் என்பதும் நீங்கள் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி கிடைக்கும் என்பது இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிராம் தங்கம் முதல் 4 கிலோ வரை தனிநபர்கள் தங்கம் வாங்கிக் கொள்ளலாம் என்றும் நிறுவனங்களை பொறுத்தவரை 20 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க முதலீட்டிற்காக வட்டி கொடுக்கப்படுவது மற்றும் முதிர்வு காலத்தின் போது தங்கத்தின் விலை எவ்வளவோ அந்த விலைக்கான முதிர்வு தொகை நமக்கு கிடைக்கும் என்பதால் தங்கம் வாங்குவதைவிட இதில் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று முதலீடு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.