சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி பயிர் காப்பீட்டுக்கு 30-ந்தேதி வரை தமிழகதில் விவசாயிகள் விண்ணப்பிக்க முடியும்
தமிழகத்தில் சம்பா, தாளடி பயிர்களை காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி வரை விவசாயிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பருவமழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து, பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை நவம்பர் .30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக வேளாண்மை துறை சார்பில் மத்திய வேளாண்மை துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ந்தேதி வரை மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பயிர் பாதுகாப்பு காப்பீடு என்றால் என்ன : இயற்கை வித்தியாசமானது. ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி எதிர்பாராத விஷயங்கள் நடக்கிறது. எனவே “பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ்” எடுத்து வைத்திருந்தால் தான் இயற்கை சேதங்கள் மற்றும் மற்ற விஷயங்களால் வரும் சேதங்களுக்கு தகுந்த இழப்பீடு பெற முடியும். மத்திய அரசு விவசாயிகள் நலன் பெற வேண்டும் நோக்கில் பயிர் பாதுகாப்பிற்காக காப்பீடு செய்கிறது.
என்னென்ன சேதங்களுக்கு இழப்பீடு கிடைக்கும்?:
1. இயற்கை சீற்றங்கள்.
2. விதைக்கும் போது, வானிலை மாற்றங்களால் ஏற்ப்படும் சேதங்கள்.
3. பயிர் நன்றாக விளைந்திருக்கையில், பருவமழை பொய்தல் மற்றும் தவிர்க்க முடியாத இயற்கை மாறுதல்கள் மூலம் ஏற்ப்படும் சேதங்கள்.
4. அறுவடை செய்த நாளில் இருந்து 14 நாட்களுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்ப்படும் சேதங்கள்.
பிரீமியம் எவ்வளவு? : நீங்கள் எவ்வளவு காப்பீடு எடுக்கிறீர்களோ, அதில் அதிகபட்சமாக 2% வரை. அதாவது, ₹1 லட்சத்திற்கு காப்பீடு எடுத்தால், பிரீமியம் வெறும் ₹2,000 மட்டுமே. 10 லட்சம் ரூபாய் காப்பீடு வேண்டும் என்றால். நீங்கள் 20000 காப்பீட்டிற்காக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
எனவே உங்களுக்கு தெரிந்த விவசாயிகள் இருந்தால், அவர்களிடம் காப்பீடு தேதி நீட்டிக்கப்பட்ட விஷயத்தை கூறுங்கள். அவர்களை அருகிலுள்ள அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதாவது ஒன்றிற்குச் சென்று, பயிர் பாதுகாப்பு காப்பீட்டினை வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால், இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களுக்கு ஏற்ப்படும் பொருளாதார இழப்புகளை முழுவதுமாக தவிர்க்க முடியும். அரசு வழங்கும் பயிர் காப்பீடு (Pradhan Mantri Fasal Bima Yojana) பற்றி தெரிந்துகொள்ள https://pmfby.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்க முடியும்.