சீனாவை சேர்ந்த லீ என்ற 23 வயது பெண், சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தொழிலதிபர் ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராமல், அவரது கார் அந்த பெண்ணின் சைக்கிளை மோதி விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தொழிலதிபர், உடனே இறங்கி வந்து இளம் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். முதலில், அந்த பெண் பரவாயில்லை என்று கூறினாலும், பின்னர் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அந்த தொழிலதிபர், லீயை மருத்துவமனையில் அனுமதித்து, தேவையான சிகிச்சைகள் அளித்தார். அவருடைய பண்பான குணம் காரணமாக, லீயின் பெற்றோர், அவர் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும் அந்த தொழிலதிபர், இளம் பெண்ணை சந்தித்து அக்கறையுடன் நலம் விசாரித்தார்.
ஒரு கட்டத்தில், லீ அவரை நேசிக்கத் தொடங்கினார். உடல் முழுவதுமாக குணமடைந்த பிறகு, அவர் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால், வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதை காரணமாகக் காட்டி, அந்த தொழிலதிபர் யோசித்தார். பின்னர், ஒரு கட்டத்தில், அவர் ஒப்புக்கொண்டார்.
தற்போது, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு விபத்து, காதலாக மாறிய ஆச்சரியமான சம்பவம், இரு தரப்பு உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.