அமெரிக்காவுக்கு உருளைக்கிழங்கு அனுப்ப வேண்டாம்.. ஆசியாவுக்கு அனுப்புங்கள்.. கனடா பிரதமர் அதிரடி உத்தரவு.. சாப்பாடு இல்லாமல் வல்லரசா இருந்து என்ன செய்வீங்க டிரம்ப்?

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தக பதற்றங்கள், சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு 35% திடீர் வரி விதித்ததால், கடந்த நான்கு மாதங்களில்…

canada

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தக பதற்றங்கள், சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு 35% திடீர் வரி விதித்ததால், கடந்த நான்கு மாதங்களில் 140,000 டன்களுக்கும் அதிகமான கனடா உருளைக்கிழங்குகள் அமெரிக்கச் சந்தையிலிருந்து காணாமல் போயுள்ளன. இதன் விளைவாக, அமெரிக்காவில் உருளைக்கிழங்கு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இந்த திடீர் சிக்கலால் அமெரிக்க உணவகங்கள் உருளைக்கிழங்கு சார்ந்த உணவுகளின் அளவை குறைத்து வருகின்றன.

கனடாவின் புதிய வியூகம்

அமெரிக்காவின் இந்த வர்த்தக மோதலுக்கு பதிலடியாக, கனடா அமெரிக்காவிற்கான உருளைக்கிழங்கு ஏற்றுமதியை நிறுத்திக்கொண்டதோடு, ஆசிய நாடுகளுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. எந்தவித வாக்குவாதமும், மோதலும் இல்லாமல், கனடாவின் வர்த்தகப் பிரதிநிதி கார்னி ஆசிய நாடுகளுடன் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தை செய்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின்மையை காட்டுகிறது. ஒரு காலத்தில் உயர்வாக மதிக்கப்பட்ட நம்பிக்கை இப்போது விலைமதிப்பற்றதாக மாறியுள்ளது.

மெக்சிகோ ஏற்கெனவே அமெரிக்காவிற்கான தக்காளி ஏற்றுமதியை நிறுத்திவிட்ட நிலையில், கனடாவும் உருளைக்கிழங்கு ஏற்றுமதியை நிறுத்தியதால் அமெரிக்க சந்தைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வர்த்தக போர்கள், தினசரி பொருட்களின் விலைகள் முதல் சர்வதேச அரசியல் உறவுகள் வரை பல்வேறு மட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உருளைக்கிழங்கு, தக்காளி உள்பட அத்தியாவசியமான உணவு பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதால் அமெரிக்க மக்கள் டிரம்ப் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். ஒரு நாடு வல்லரசாக இருந்து என்ன செய்ய? அந்த நாட்டு மக்களுக்கு சாப்பாடு கூட கிடைக்கவில்லை என்றால் வல்லரசு என்ற புகழ் மட்டும் இருந்து ஒன்றுக்கும் பயன்படாது’ என ஆத்திரத்துடன் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.