கொரோனா வைரஸ் பாதிப்பின் போது வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அமேசான் உள்பட பல நிறுவனங்கள் கடந்து சில ஆண்டுகளாக தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்யும் முறைக்கு அனுமதித்தது. ஆனால் தற்போது அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை காலவரையின்றி வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி தரவில்லை என்றும் அலுவலகத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு ஒப்பு கொண்டுள்ளதாகவும் சில ஊழியர்கள் மட்டும் இந்த அறிவிப்புக்கு ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் டெஸ்லா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை வலுக்கட்டாயமாக அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளன. இருப்பினும் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இன்னும் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணியின் தன்மை, நிறுவனத்தின் கலாச்சாரம், ஊழியர்களின் கலந்துரையாடல் உள்பட பல காரணங்களை கருத்தில் கொண்டு தான் வீட்டிலிருந்து வேலை செய்வதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அலுவலகத்திற்கு திரும்புவதா இல்லையா என்பது ஊழியர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் ஆனால் அலுவலகத்திற்கு திரும்பினால் மட்டுமே வேலை நீடிக்கப்படும் என்றும் உறுதியாக கூறப்பட்டு இருப்பதால் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைப்பதற்கான சில காரணங்கள் இதோ:
* பணியாளர்கள் நேரில் ஒன்றாக வேலை செய்யும் போது, அவர்களது சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று நிறுவனங்கள் நம்புகிறது.
* ஊழியர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் நிறுவனத்துடன் இணைந்திருப்பதை உணரும் கலாச்சாரத்தை உருவாக்க நிறுவனங்கள் விரும்புகிறது.
அலுவலகத்திற்குத் திரும்புவதில் சில ஊழியர்கள் ஏமாற்றமடைந்ததற்கான சில காரணங்கள் இங்கே:
* வீட்டில் இருந்து முழுநேர வேலை செய்யக்கூடிய நெகிழ்வுத்தன்மையை இழக்கின்றனர்.
* அலுவலகத்திற்குச் செல்வது கடினம், குறிப்பாக அலுவலகத்தில் இருந்து தொலைவில் வசிப்பவர்கள்.
* அலுவலகத்தில் வேலை செய்யும் போது உற்பத்தி குறைவாக இருக்கும் என்று கவலைப்படுகிறார்கள்.