இனி குழந்தையை இடுப்பிலோ தோளிலோ தூக்கி கொண்டு செல்ல வேண்டாம்.. அதற்கும் வந்துவிட்டது கருவி..!

  குழந்தையை தூக்கிக்கொண்டே பணிகளை செய்வதற்காக கஷ்டப்படுகிறீர்களா? அல்லது உங்கள் குழந்தையுடன் சுற்றுலா செல்ல ஆசைப்படுகிறீர்களா? உங்கள் குழந்தையை தூக்கி இடுப்பிலோ அல்லது தோளிலோ தூக்கிக்கொள்வது சிரமமாக இருக்கிறதா? பயப்பட வேண்டாம்! ButtBaby இதற்கான…

butt baby

 

குழந்தையை தூக்கிக்கொண்டே பணிகளை செய்வதற்காக கஷ்டப்படுகிறீர்களா? அல்லது உங்கள் குழந்தையுடன் சுற்றுலா செல்ல ஆசைப்படுகிறீர்களா? உங்கள் குழந்தையை தூக்கி இடுப்பிலோ அல்லது தோளிலோ தூக்கிக்கொள்வது சிரமமாக இருக்கிறதா? பயப்பட வேண்டாம்! ButtBaby இதற்கான தீர்வாக வந்துவிட்டது!

Butt Baby Enterprise Limited நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான Butt Baby Seat என்பது சிறந்த அமைப்பில் வடிவமைக்கப்பட்ட, குழந்தையையும் பெற்றோர்களையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய வகை குழந்தை தூக்கும் கருவி.

இந்த தயாரிப்பின் முக்கிய அம்சங்கள் என்னவெனில் குழந்தையை ஆறு விதமான நிலைகளில் தூக்கிக்கொள்ளும் வசதி, மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் அளவிலான வடிவமைப்பு, ஐந்து சேமிப்பு பைகள், டைப்பர் பையின் மாற்றாகவும் பயன்படும், மேலும் வலிமையான ஸ்ட்ராங் வெல்க்ரோ, டபிள்-லாக் பாதுகாப்பு கிளாஸ்புகள், YKK ஜிப் ஆகியவை உள்ளன. குழந்தை இல்லாதபோது ஸ்லிங் பேக் போலவும் பயன்படுத்தலாம்

900 கிராம்-க்கு கீழ் எடை, 42 இன்ச் வரை இடுப்புக்கு பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தாலும் ப்ளஸ் சைஸ் பயன்பாட்டுக்கு எக்ஸ்டென்டர் வசதியும் உண்டு.

இந்த நிறுவனத்தை தொடங்கியவர்கள் ருசி ஜெயின் மற்றும் ஆகாஷ் ஜெயின். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்திய சந்தையில் ஆர்கோனாமிக் மற்றும் பாதுகாப்பான குழந்தை தூக்கும் கருவிகளின் பற்றாக்குறை இவர்களுக்கு தோன்றியது,

“நாங்கள் விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன்களில் படும் சிரமங்களால் இந்த எண்ணம் வந்தது. டிக்கெட், பாஸ், சாமான்கள் வாங்குவது ஆகியவற்றை கையாளும்போது குழந்தைக்கு உட்கார இடம்கூட கிடைக்காது,” என்று ருசி கூறுகிறார்.

இதனால், 2022 டிசம்பர் 14ம் தேதி, கொல்கத்தாவை மையமாகக் கொண்டு Butt Baby Enterprise Private Limited நிறுவப்பட்டது. முதலில் இந்த கருவியை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தான் விளம்பரம் செய்தோம். பெற்றோர் கஷ்டத்தை நிஜமாக காட்டும் காமிக் வழிகாட்டிகள், கதைகள் மூலம் 70,000 ஃபாலோவர்களை உருவாகினர். அதன்பிறகு இந்த கருவி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைய தொடங்கிவிட்டது என ருசி கூறியுள்ளார்.

இந்த கருவியை உற்பத்தி செய்ய தொடக்க முதலீடு ₹4 லட்சம்ன் மட்டுமே. ஆனால் ஒரே ஆண்டில் ₹4.25 கோடி வருவாய் ஈட்டியதாகவும், 2024–25 நிதியாண்டில் வருவாய் ₹14 கோடி வருவாயை கடந்து விட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் ₹22 கோடி வருவாயை இலக்காக வைத்துள்ளனர்.

இந்தியாவின் குழந்தை பராமரிப்பு சந்தை 2027க்குள் $14.58 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.