ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பதவி ஏற்ற நிலையில், அவர் ஆந்திராவின் தலைநகர் அமராவதி என்ற நகரத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ₹13,000 கோடி கடன் தர இருப்பதாகவும், இந்த நகரத்தின் பணிகள் சுறுசுறுப்பாக தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதிதாக உருவாகும் அமராவதி நகரை தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்க புல்லட் ரயில் வசதி ஏற்பாடு செய்யப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கூறியுள்ளார். குறிப்பாக, அமராவதி நகரத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், இது குறித்து மத்திய அரசு மற்றும் ரயில்வே துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
அநேகமாக 2026 ஆம் ஆண்டில் புல்லட் ரயில் கட்டுமானம் தொடங்கும் வாய்ப்பு உள்ளது என்றும், இந்த திட்டம் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள பொருளாதாரத்தை வேகப்படுத்த முக்கிய பங்கு வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.