கொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகம் உள்ளது. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.…

Kollidam Cow Survival

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகம் உள்ளது. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் பருவமழை டெல்டா மாவட்டங்களிலும் அதிக அளவில் பெய்ததால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. கடலூரில் கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத்தில் அண்மையில் சுமார் 30 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளம் அதிக அளவில் சென்றதால் அவற்றை மீட்க முடியவில்லை. இதனால் 30 மாடுகளுமே நீரில் அடித்துச் செல்லப்பட்டு கடலுக்குள் இழுத்துச் சென்றன.

கோமியத்தில் கொட்டும் லாபம்.. மாற்றி யோசித்த இளைஞர்.. மளமளவென வளரும் தொழில்

இன்று இதேபோல் ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நிகழ்ந்தது. ஆனால் இம்முறை அனைத்து மாடுகளும் உயிர்பிழைத்தன. எப்படி எனில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற சுமார் 20 மாடுகள் வெள்ள நீரில் சிக்கியது. இதனால் ஆற்றின் நடுப்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது மாட்டின் உரிமையாளர் தனது மாடுகளைக் காணவில்லை எனத் தேட வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது கண்டு அதிர்ச்ச அடைந்தார்.

உடனடியாக பாதுகாப்பான பகுதியில் நின்று மாடுகளை நோக்கி கூக்குரலிட்டார். தனது உரிமையாளரைக் கண்டதும் மாடுகளுக்குப் புது ஆற்றல் பிறக்க எதிர்நீச்சல் போட்டது. தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக மாடுகள் நீந்த ஆரம்பிக்க புது சக்தி பிறந்து அனைத்தும் பாதுகாப்பாக கரை சேர்ந்தது.

மாடுகள் எதிர்நீச்சல் போட்டபடியே கரைசேர்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.