தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பைபர் இன்டர்நெட் துறையிலும் பிஎஸ்என்எல் கால் பதிக்க இருப்பதாகவும் 500 லைவ் டிவி சேனல்களை பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு வழங்க இருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம், அதன் ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) நெட்வொர்க்கைப் பயன்படுத்தி பயனர்களுக்கு தெளிவான காட்சிகள் மற்றும் கட்டண டிவி வசதிகளுடன் நேரடி டிவி சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம், பயனர்கள் தரமான தொலைக்காட்சி சேனல்களை பார்க்க முடியும்.
பிஎஸ்என்எல் IFTV சேவையில் உயர் தரத்திலான ஸ்ட்ரீமிங் அனுபவம் கிடைக்கும்.
இந்த புதிய IFTV சேவை, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 500க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை உயர் தரத்தில் அனுபவிக்க வாய்ப்பு அளிக்கிறது.
BSNL நிறுவனத்தின் IFTV சேவையில் பிரபலமான OTT சேவைகளான அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நெட்ஃபிக்ஸ், யூடியூப் மற்றும் ZEE5 போன்றவை கிடைக்கும். கூடுதலாக, கேம் ஆப்ஷன்களும் இந்த சேவையுடன் வழங்கப்படும் என்பதால், இதன் பயனர்கள், ஆன்லைன் கேமிங் அனுபவத்தை பெற முடியும்.
ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்குப் பிறகு இயங்கும் ஆண்ட்ராய்டு டிவிகளை கொண்ட வாடிக்கையாளர்கள், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பிஎஸ்என்எல் லைவ் டிவி பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, பதிவுசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.