BSNL போட்டியை சமாளிக்க இறங்கி வந்த அம்பானி.. மீண்டும் குறைந்த ரீசார்ஜ்..!

By Bala Siva

Published:

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போதைய நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டில் மட்டும்தான் குறைந்த விலை ரீசார்ஜ் உள்ளதை அறிந்து, மிகவும் குறைவாக போன் பயன்படுத்துபவர்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறியுள்ளனர். இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வெளியேறுவதை கண்ட ஜியோ, தற்போது மீண்டும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 189 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் இரண்டு ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படும். 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற வசதிகளும் உள்ளன. அதிக டேட்டா தேவைப்படாதவர்கள் 189 ரூபாய் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே, ஏர்டெலில் இதே சலுகைகளை வழங்கும் 199 ரூபாய் திட்டம் உள்ளது. BSNL போட்டியை சமாளிக்க ஜியோ நிறுவனம் தற்போது மீண்டும் 189 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.