BSNL-ல் டைரக்ட்-டு-டிவைஸ் தொழில்நுட்பம்.. சிம் இல்லாமல் சாட்டிலைட் அழைப்பு..!

By Bala Siva

Published:

 

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை செய்து கொடுக்கும் நிலையில், தற்போது டைரக்ட் டு டிவைஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதற்கான சோதனைகளை முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்றும், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் BSNL சிம் இல்லாமல் கால் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

BSNL தனது பயனர்களுக்கு தடையில்லாத சேவை வழங்கவும், இந்த தொழில்நுட்பம் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. வியாசாட் (Viasat) என்ற நிறுவனத்துடன் BSNL இணைந்து, இந்த டைரக்ட் டு டிவைஸ் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச், கார்கள் உள்ளிட்ட சாதனங்களில் இந்த நெட்வொர்க் இணைக்கலாம் என்றும், நெட்வொர்க், டவர் சரியில்லாத இடத்தில், கவரேஜ் இல்லாத இடங்களில் கூட இந்த தொழில்நுட்பம் மூலம் கால் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டால், மொபைல் போன்களுக்கு மொபைல் டவர் மற்றும் வயர் கனெக்சன் தேவைப்படாது என்றும், இந்த புதிய தொழில்நுட்பம் தொலைதொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, விரைவில் இந்த தொழில்நுட்பம் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுவதால், BSNL நிறுவனத்திற்கு இன்னும் கூடுதலாக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.