விடிஞ்சா கல்யாணமாம். அலங்காநல்லூரில் 7 காளைகளை அடக்கிய கல்யாண மாப்பிள்ளை!

By Gayathri A

Published:

பொங்கல் பண்டிகையினை ஒட்டி ஜல்லிக்கட்டி போட்டியானது தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாளை திருமணம் நடக்கவுள்ள நிலையில் இளைஞர் ஒருவர் ஜல்லிக்கட்டிப் போட்டியில் இன்று கலந்து கொண்டுள்ளார்.

அதாவது ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற ஊரான மதுரையில் காளையினை அடக்கும் போட்டியில் காளைகளும், வீரர்களும் பங்குபெற்று வருகின்றனர்.

அந்தவகையில் மதுரை உள்ள அலங்கா நல்லூரில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் காளையின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கும் காளையர்களுக்கும் தங்கக் காசு, கார், வண்டி, ரொக்கத் தொகை எனப் பல பரிசுகள் கிடைக்கவுள்ளன.

இந்தப் போட்டியில் பங்குபெற்று இதுவரை 7 காளைகளை அடக்கியுள்ள போட்டியாளர்தான் விஜய். இவர் போட்டி துவங்கியதில் இருந்து அசராமல் காளைகளை அடக்கி அதிரடி காட்டி வருகிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் விஜய்க்கு நாளை திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண புது மாப்பிள்ளை அதிக காளைகளை அடக்கி காரை வெல்ல வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோள் என்று கூறிவிட்டு வெறித்தனமாக விளையாடுகிறார்.

 

 

Leave a Comment