பேராசிரியர் செங்ஜோங் தலைமையிலான ஆராய்ச்சி குழு, மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கான உயிர்க்காப்பு சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்க புதிய நானோ துகள்களை உருவாக்கி வருகிறது.
மார்பகப் புற்றுநோய் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கு பொதுவாக மருந்துகள் பெரிய அளவில் பயன்படுவதில்லை. வழக்கமான சிகிச்சைகள் மார்பகப் புற்றுநோய்க்கு பெரிதாக உதவவில்லை.
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய உயிர் வேதியியல் மற்றும் நானோ தொழில்நுட்ப நிறுவனம் மார்பகப் புற்றுநோய்க்கு மாற்று சிகிச்சை முறைகளின் அவசியத்தை உணர்ந்துள்ளது.
“உயிர்க்காப்பு சிகிச்சை புற்றுநோய்க்கு வலுவான எதிர்வினை அளிக்கிறது, ஆனால் மார்பகப் புற்றுநோய்க்கு இதன் பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் உயிர்க்காப்பு செயல்பாட்டை அதிகரிக்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நானோ துகள்களை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நானோ தொழில்நுட்பம் “நானோ-அட்ஜுவண்ட்” என அழைக்கப்படும். இது நுண்ணிய அளவில் செயல்பட்டு, நோயெதிர்ப்பு அமைப்பின் முக்கிய பகுதியாக விளங்கும் “T-செல்களின்” செயல்திறனை மேம்படுத்துகிறது.
இந்த நானோ துகள்கள் புற்றுநோயின் சுற்றுச்சூழலில் செயல்பட்டு, மார்பகப் புற்றுநோய் செல்களுடன் தொடர்பு கொண்டு, நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்க உதவுகின்றன என்பது தான் விஞ்ஞானிகளின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு ஆகும்.
இரும்பு அடிப்படையிலான நானோ துகள்களை, செல் மரணத்தை தூண்டும் பொருட்களுடன் இணைத்து, மார்பகப் புற்று நோயாளிகளுக்கான உயிர்க்காப்புச் சிகிச்சையின் விளைவுகளை அதிகரிக்க ஆராய்ச்சிக்குழு முயற்சிக்கின்றது.
இதுவொரு ஐந்து ஆண்டுகளுக்கான திட்டம் எனவும், புற்றுநோய் சிகிச்சையில் விரைவில் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமின்றி இந்த நானோ சிகிச்சையை கருப்பை புற்றுநோய்க்கும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.