எலான் மஸ்க் அவர்களின் நியூரோலிங் நிறுவனம் மூளையில் சிப் பதிக்கும் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் விபத்தில் ஊனமுற்ற ஒருவர் எழுந்து நடமாடுவதோடு அனைத்து பணிகளையும் தானே செய்யும் வகையில் மாறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து காரணமாக கடந்த எட்டு ஆண்டுகளாக ஊனமுற்ற நிலையில் இருந்த 30 வயதான நோலன் ஆர்பாக் என்பவருக்கு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியூரோலிங் நிறுவனம் மூளையில் மைண்ட் ரீடிங் சிப் பதித்தது. இந்த சிப் பதிக்கப்பட்ட உலகின் முதல் நபர் என்ற நிலையில், அவரது எண்ணங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் கட்டளையின்படி செயல்படும் அளவுக்கு கொண்டு வரப்பட்டது.
மூளையில் சிப் பதிக்கும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் விழித்தெழுந்த அவர், கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் உள்ள கர்சரை நகர்த்த முடிந்தார். ஐ-ட்ராக்கிங் முறையின் மூலம் மூளைக்கு கட்டளையிட, அந்த கட்டளை தானாகவே செயல்படும் நிலையில் வந்தது. அதாவது, “நீங்கள் இப்போது எழுந்து நடந்து பாருங்கள்” என்று சொன்னவுடன், சிப் உடனே மூளைக்கு கட்டளை இடுகிறது. இதன் மூலம், 8 ஆண்டுகளாக ஊனமுற்றிருந்த அவர் திடீரென எழுந்து நடக்க முடிந்தது.
மனித மூளையுடன் இயந்திரத்தை இணைக்க வேண்டும் என்ற எலான் மஸ்கின் கனவு, நிஜமாகியுள்ளது. இதுவரை மற்றவர்களை முழுமையாக நம்பி இருந்த நோலன் தற்போது தானாகவே எழுந்து நடமாடுகிறார்; தனக்கான வேலைகளை தானே செய்து கொள்கிறார்.
விபத்துக்கு முன்பு அவர் செஸ் மற்றும் வீடியோ கேம்களை விளையாடிய நிலையில், விபத்திற்குப் பிறகு அவரது மூளை அந்த திறனை இழந்துவிட்டது. ஆனால் தற்போது, தனது நண்பர்களையே தோற்கடிக்கும் அளவுக்கு மிக திறமையாக விளையாடுகிறார். அவரது மூளை கட்டளைகளை மிக அருமையாக செயல்படுத்தும் தன்மை பெற்றுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் எதுவும் விபரீதம் நேரிடுமா என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள் முழுமையாக முடிந்தவுடன், தேவையான மனிதர்களுக்கு மூளையில் சிப் பொருத்தலாம் என்றும், இதன் மூலம் உலகில் ஊனமுற்ற மனிதர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மனித இனத்திற்கே புரட்சியாக அமைந்துள்ள எலான் மஸ்கின் நியூரோலிங் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் ஒரு பெரிய திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.