போட்டி போட்டு பிரமோஸ் ஏவுகணையை இந்தியாவில் இருந்து வாங்கும் நாடுகள்.. ஆர்மீனியாவை அடுத்து பிலிப்பைன்ஸ்.. சீனாவின் ஏவுகணை அடித்து நொறுக்கும் பிரமோஸ்-க்கு குவியும் ஆர்டர்கள்.. இனி வல்லரசு இந்தியா தான்..!

இந்தியாவிடம் இருந்து வாங்கப்பட்ட முதல் பிரமோஸ் ஏவுகணை பிரிவை பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்தி உள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலையில் இது ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படும் நிலையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இது…

bramos

இந்தியாவிடம் இருந்து வாங்கப்பட்ட முதல் பிரமோஸ் ஏவுகணை பிரிவை பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்தி உள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலையில் இது ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படும் நிலையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இது உடனடியாக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் 2022-ஆம் ஆண்டில் இந்தியாவுடன் $375 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் மூன்று பிரமோஸ் ஏவுகணை பிரிவுகளை பெறுகிறது.

முதல் ஏவுகணை பிரிவு தற்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது வடக்கு லூசன் பகுதியில், தென் சீனக் கடலுக்கு மிக அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸூக்கு வழங்கப்பட்ட இந்த பிரமோஸ் ஏவுகணையின் வரம்பு சுமார் 290 கி.மீ. ஆகும். இது மேக் 2.8 முதல் 3.0 என்ற மீயொலி வேகத்தில் (Supersonic Speed) பயணிக்கிறது. இது சுமார் 200 முதல் 300 கிலோ எடையுள்ள உயர் போர்க்கருவியை சுமந்து செல்லும். அதிக வேகம், தாழ்வான உயரம் மற்றும் ரேடார் தேடுதலில் சிக்காமல் எதிரிகளுக்கு பதிலடி கொடுத்து பாதுகாப்பை உறுதி செய்யும்.

இந்த ஏவுகணை பரிமாற்றம் வழக்கமான ஆயுத விற்பனையாக பார்க்கப்பட்டாலும், இதற்கு ஆழமான சில விளைவுகள் உள்ளன:

இது பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு சப்ளையர்களை பன்முகப்படுத்துகிறது. மேலும், தாக்குதலுக்கு ஆளாகும் அபாயத்தை குறைக்கும் வகையில், நிலத்திலிருந்தே நகர்ந்து தாக்குதல் தொடுக்கக்கூடிய ஒரு உடனடி தாக்குதல் திறனை வழங்குகிறது.

தனது சொந்தப் படைகளை நிலைநிறுத்தாமல், ஒரு பிராந்திய கூட்டாளிக்கு வலிமை அளிப்பதன் மூலம், அந்த பகுதியில் சீனாவின் மேற்பரப்பு சொத்துகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தடுப்பு சக்தியை இந்தியா வடிவமைக்கிறது.

சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்தபோது சீனாவிடம் இருந்து வாங்கிய ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. ஆனால் அதில் ஒன்று கூட இந்தியாவை தாக்காமல் பிரமோஸ் தடுத்தது. அதேபோல் சீனாவின் ஆயுதங்கள் பிலிப்பைன்ஸை இனி தாக்கினால் அங்குள்ள பிரமோஸ் தடுக்கும் என்பதால் சீனாவின் ஆபத்து இனி பிலிப்பைன்ஸூக்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், பிலிப்பைன்ஸின் பாதுகாப்புக்கு இது ஒரு உறுதியான மாற்றமாகும். அதன் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் உள்ள மேற்பரப்பு கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய ஒரு நம்பகமான ஒரு நடவடிக்கையாக பிலிப்பைன்ஸ் தற்போது உணர்கிறது.