இன்றைய இளைஞர்கள் 10 மணியிலிருந்து 6 மணி வரை வேலை செய்யும் புளு காலர் வேலை மட்டுமே வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் புளு கலர் ஜாப் வேண்டும் என்றும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் கனவில் மிதந்து வருகின்றனர். ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் இந்தியாவில் 57% புளு காலர் வேலையில் ரூ.20,000 மட்டுமே சம்பளம் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளது.
29% புளு காலர் வேலை செய்யும் இளைஞர்கள் மாதம் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாகவும் பெரும் 10% ஊழியர்கள் மட்டுமே 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
ஒரு ஓட்டலில் வேலை செய்யும் புரோட்டா மாஸ்டர் கூட தினசரி 1500 ரூபாய் சம்பாதிக்கும் நிலையில் புளு கலர் ஜாப் கனவில் இருக்கும் இளைஞர்களுக்கு வெறும் ரூ.20,000 தான் என்ற தகவல் புள்ளிவிவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனி வருங்காலத்தில் வேலை பார்ப்பதை விட சொந்த தொழில் செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.