Blaupunkt நிறுவனம் வழங்கும் ஸ்மார்ட் டிவிகள்: என்னென்ன சிறப்பம்சங்கள்?

By Bala Siva

Published:

தற்போது உலகம் முழுவதும் ஸ்மார்ட் டிவிகள் மட்டுமே விற்பனையாகி வரும் நிலையில் டிவி தயாரிக்கும் நிறுவனங்கள் புதுப்புது மாடல்கள், புதுப்புது அம்சங்கள் கொண்ட டிவிகளை தயாரித்து வருகின்றன. அந்த வகையில் ஸ்மார்ட் வி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் Blaupunkt என்ற நிறுவனம் தயாரிப்பில் உள்ள ஸ்மார்ட் டிவிகள் குறித்து தகவல்களை தற்போது பார்ப்போம்.

Blaupunkt ஸ்மார்ட் டிவிகள் அவற்றின் அம்சங்கள் மற்றும் செயல்திறனுக்காக வாடிக்கையாளர்களால் உயர்வாக மதிப்பிடப்படுகின்றன. இந்த டிவிக்களில் உள்ள முக்கிய அம்சங்கள் சில.

* ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம்
* HDR10+ மற்றும் Dolby Vision ஆதரவு
* DTS TruSurround ஒலி
* சக்தி வாய்ந்த ஸ்பீக்கர்கள்
* பல இணைப்புகளை கொண்ட வச்தி
* நேர்த்தியான வடிவமைப்பு

இந்த டிவிக்களில் கூர்மையான படங்கள் மற்றும் தெளிவான ஒலி, ஒளியை வழங்குகின்றன, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கேம்களை விளையாடுவதற்கு ஏற்றதாக உள்ளது. பயன்படுத்த எளிமையாகவும் உள்ளது.

Blaupunkt டிவியில் எச்டி (HD), ஃபுல் எச்டி (FHD), 4கே (4K), க்யூஎல்இடி (QLED) என 4 ரெசல்யூஷன்களில் கிடைக்கிறது. , 6 வெவ்வேறு டிஸ்பிளே அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 32, 40, 43 இன்ச் அளவுகளில் டிஸ்ப்ளேக்களை கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவிக்கள் குறைந்தது ரூ.10,888 முதல் ரூ.99,999 வரை சைஸ், சிறப்பம்சங்கள் ஆகியவை பொறுத்து விற்பனையாகிறது. அமேசான், ஜீ5, சோனிலைவ், வூட் போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களின் ஷார்ட்கட் கீஸ் கொண்ட ரிமோட் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவிக்களில் ப்ளூடூத், வைஃபை, வாய்ஸ்-எனேபிள்ட்டு ரிமோட் ஆகிய அம்சங்களும் உண்டு.