சரணாலயத்திற்கு வந்த பறவைகள் செய்த வினோத செயல்… மக்கள் அச்சம்…

By Meena

Published:

இயற்கையை மனிதனால் ஒருபோதும் வெல்ல முடியாது. மனிதர்களோ பூமிக்கு பலவித தீங்கான செயல்களை இன்றளவும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வப்போது இயற்கை இருக்கிறது என்பதற்கு சான்றாக பல பேரிடர்களை நிகழ்த்தி நமக்கு அறிவுறுத்தும். அது நிலநடுக்கமாக இருக்கலாம் வெள்ளப்பெருக்கு சுனாமி போன்றவைகளாக இருக்கலாம். இந்த இயற்கை பேரிடர்களை மனிதர்களை விடவும் விலங்குகள் பறவைகள் மற்றும் சிறு உயிரினங்களுக்கு முன்னமேறியும் திறன் இருக்கிறது.

நம் முன்னோர்கள் எந்த ஒரு இயற்கை பேரிடர் வருவதற்கு முன்பும் விலங்குகள் பறவைகள் போன்றவைகளின் செய்கைகளை கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பர். அதுபோன்ற ஒரு செயல்தான் தற்போது நடந்து பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் வேட்டுங்குடி சரணாலயத்திற்கு பலவித வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதுண்டு. அங்கு வரும் பலதரப்பட்ட வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை பொரித்து கூட்டிச்செல்லும். அதுபோல இந்த தடவையும் பறவைகள் வந்திருக்கிறது. ஆனால் எப்போதும் மரக்கிளைகளில் கூடுகட்டி வாழும் பறவைகள் வினோதமாக இந்த முறை மரத்தின் உச்சியில் கூடு கட்டி இருக்கின்றது.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள் இது இயற்கை பேரிடருக்கான அறிகுறியாக இருக்கலாம். அதாவது பேய் மழை அதீத வெள்ளப்பெருக்கு போன்றவற்றை இந்த ஆண்டு வரலாம் அதற்காக தான் இந்த பறவைகள் மேலே சென்று கூடு கட்டி இருக்கிறது என்று அச்சத்துடன் பேசி வருகின்றனர்.