பெரும்பாலும் பைக் இன்சூரன்ஸ் எடுப்பவர்கள் விபத்து ஏற்பட்டால் அதில் பைக் சேதம் ஆனால், அதற்கான இன்சூரன்ஸ் கிளைம் செய்யலாம் என்ற நோக்கத்திலேயே இன்சூரன்ஸ் எடுப்பார்கள். ஆனால், இன்சூரன்ஸ் எடுக்கும் போது ஒரு பைக்கில் எவ்வாறு நஷ்டம் ஏற்படலாம் என்பதை கவனித்து, அவற்றை முழுமையாக கவர் செய்யும் இன்சூரன்ஸ் எடுத்தால் மட்டுமே பைக் இன்சூரன்ஸின் முழுமையான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பைக் இன்சூரன்ஸ் பல வகைகளில் இருக்கும் நிலையில், அதில் உள்ள சில நிபந்தனைகளை படித்து, சரியாக புரிந்து கொண்டு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். சில இன்சூரன்ஸ்களில் வெறும் விபத்து மூலம் ஏற்படும் சேதத்திற்கு மட்டுமே கிளைம் செய்ய முடியும் என்று இருக்கும். அந்த வகையில் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால், ஒருவேளை பைக் தொலைந்து விட்டால் அதற்கு கிளைம் செய்ய முடியாது.
எனவே, இன்சூரன்ஸ் எடுக்கும் போது பைக் தொலைந்து போகுதல், சேதமடைதல், விபத்து உள்ளிட்ட அனைத்தும் கவரில் உள்ளதா என்பதை சரி பார்த்து, இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வெறும் விபத்தால் ஏற்படும் சேதத்திற்கு மட்டும் இன்சூரன்ஸ் எடுத்தால், பைக் தொலைந்தால் இன்சூரன்ஸ் இருந்தும் பயனில்லாமல் போகும் என்பதால், அனைத்து விதமான இழப்புகளையும் கவர் செய்யும் வகையிலான இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கொஞ்சம் பணம் அதிகமாக இருந்தாலும், அந்த வகையான இன்சூரன்ஸ் தான் பைக் வைத்திருப்பவர்களுக்கு பொருத்தமாகும் என்றும் கூறப்படுகிறது.