12 ஆண்டு காதல் திருமண வாழ்க்கை.. ஆனாலும் மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்.. காரணம் என்ன

பீகார் மாநிலத்தில் தான் காதலித்து திருமணம் செய்து 12 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த ஒருவர், தனது மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பான செய்தியும் அதன் பின்னணியும் தற்போது பலர் மத்தியில்…

Husband arrange other marriage for his wife

பீகார் மாநிலத்தில் தான் காதலித்து திருமணம் செய்து 12 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த ஒருவர், தனது மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பான செய்தியும் அதன் பின்னணியும் தற்போது பலர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பின்னர் அதை தாண்டிய உறவு என்பது சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. சில இடங்களில் இந்த பிரச்சனைகளால் பல விபரீதமான சம்பவங்களுக்கும் வழி வகுக்கும் சூழலில், இன்னும் நிறைய சிக்கல்களும் இது தொடர்பாக எழாமல் இல்லை.

அப்படி இருக்கையில், பீகார் மாநிலம் சஹர்சா என்ற பகுதியிலும் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அடுத்தடுத்து நிறைய திருப்பங்களும் அரங்கேறி உள்ளது. பீகார் மாநிலம் சஹர்சா என்ற பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

காதலித்து திருமணம் செய்து 3 குழந்தைகளுடன் சந்தோசமாக குடும்பத்தை கொண்டு சென்ற போதும் அந்த பெண்ணிற்கு வேறொரு நபருடன் காதல் உருவானதாக கூறப்படுகிறது. அந்த நபரும் திருமணம் ஆனவர் என்பதுடன் அவருக்கும் 2 குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பொதுவாக ஒருவர் தனது மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை அறிந்தால் அதிகம் அதிர்ச்சி அடைவார். தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியும் இன்னொருவரை காதலித்து வருவதை அறிந்த கணவர் ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் மெல்ல மெல்ல நிலைமையை புரிந்து கொண்டு அதிர்ச்சிகரமான முடிவையும் எடுத்துள்ளார்.

தனது மனைவியுடனான திருமண வாழ்க்கையை முறித்து கொள்ள முடிவெடுத்த அந்த கணவர், காதலனுடன் மனைவியை திருமணம் செய்து வைக்கும் துணிந்துள்ளார். இதற்கான முயற்சிகளை எடுத்ததுடன் மட்டுமில்லாமல் முன்னின்று அவர்களின் திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளார் அந்த கணவர்.

அந்த சமயத்தில் மனைவியின் நெற்றியில் அவரது காதலன் குங்குமத்தை வைக்க, அப்போது பேசிய கணவர், இனிமேல் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இனிமேல் உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரையும், குழந்தைகளையும் பிரிந்து பெண் எடுத்த இந்த முடிவு பற்றி அனைவரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். அதே நேரத்தில், நிஜமான காதல் என்ற விஷயத்தை பெரிதாக எடுத்து அந்த கணவர் மனைவிக்கு திருமணம் செய்து வைத்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.