Bigg Boss Tamil Season 8 Day 26: நாமினேஷன் Free பாஸை பெற்ற சுனிதா… தலைவரான சத்யா!

Bigg Boss Tamil Season 8 Day 26 இல் தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் யாரு வெடிக்கும் பட்டாசு யார் நமத்து போன பட்டாசு என்பது போல்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 26 இல் தீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் யாரு வெடிக்கும் பட்டாசு யார் நமத்து போன பட்டாசு என்பது போல் டாஸ்க் நடத்தினார். இதில் பலர் உண்மை முகம் வெளிவந்தது என்பது சொல்லலாம். நமத்து போன பட்டாசாக ஜாக்குலின், ரஞ்சித் ஆகியோர் கூறப்பட்டனர்.

bigg boss 63

அடுத்ததாக இந்த வாரத்தில் யார் நன்றாக விளையாடினார்கள் என்ற டாஸ்க் நடத்தினார். பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் ஆக ஆனந்தியும் சத்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ர்ஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் ஆக ஜெப்ரி, சாச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த டாஸ்கல் சற்று உடன்பாடு இல்லாதபோதுதான் தெரிந்தது.

ஆர்.ஜே ஆனந்தியை விடவும் சௌந்தர்யா சுனிதாவாக நல்லாவே பெர்பார்ம் செய்திருந்தார். ஆனால் அவரை ஏன் பெஸ்ட் பெர்பாமில் செலக்ட் செய்யவில்லை என்பது தெரியவில்லை. அடுத்ததாக நாமினேஷன் ஃப்ரீ பாசுக்கான டாஸ்க் நடத்தப்பட்டதில் பெண்கள் அணி வெற்றி பெற்று அந்த பாசை வாங்கினர். பின்னர் யாருக்கு அந்த நாமினேஷன் பிரீ பாஸை தரலாம் என்று கலந்துரையாடினார்கள்.

bigg boss 64

இறுதியில் இந்த நாமினேஷன் பிரீ பாஸ் சுனிதாவிற்கு சென்றது. அடுத்ததாக அடுத்த வாரம் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. ஆனந்தியும் சத்யாவும் பங்கேற்றனர். இதில் சத்யா வெற்றி பெற்று அடுத்த வார தலைவராக மாறினார். இதற்கிடையில் வைல்டு கார்டு கண்டஸ்டன்ஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போவதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. ன்று விஜய் சேதுபதி எபிசோடு ஆதலால் அவர் என்ன பேசப் போகிறார் என்று காண ஆவலாக இருக்கிறது.