1791 பந்துகள்.. புவனேஸ்வர் அத்தனை பந்துல செய்யாத தப்ப 26 பந்துலயே செஞ்ச மயங்க் யாதவ்.. என்ன நடந்தது?..

முன்பெல்லாம் பல சர்வதேச போட்டிகள் தொடர்ந்து ஆடினாலும் அதில் திறமையை வெளிக்காட்டிக் கொண்டே இருந்தால் மட்டும் தான் அதிகம் பிரபலமாவதுடன் தொடர்ந்து வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இந்திய அணியை பொருத்தவரையில்…

mayank yadav vs bhuvi

முன்பெல்லாம் பல சர்வதேச போட்டிகள் தொடர்ந்து ஆடினாலும் அதில் திறமையை வெளிக்காட்டிக் கொண்டே இருந்தால் மட்டும் தான் அதிகம் பிரபலமாவதுடன் தொடர்ந்து வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இந்திய அணியை பொருத்தவரையில் தற்போது எல்லாம் இளம் வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் புதிதாக அறிமுகமாகி வருவதுடன் அசத்தலான திறமையும் வெளிக்காட்டி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் ஒரே போட்டியில் அதுவும் ஒரே இன்னிங்சில் பல இளம் வீரர்கள் அதிகம் கவனிக்கப்பட்டும் வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பல வீரர்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருவதால் ஒன்றிரண்டு போட்டியில் சொதப்பினால் கூட அணியை விட்டு வெளியேறும் நிலையும் இருந்து வருகிறது.

இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியில் தான் இளம் வீரர்கள் சவாலான வாய்ப்பை பயன்படுத்தி தங்களை தக்கவைத்து கொள்வதற்கான வழிகளிலும் இறங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் மயங்க் யாதவ், வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகம் ஆகி இருந்தார். இவர் லக்னோ அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி அதிகமாக கவனம் ஈர்த்தவர்.

150 கி. மீ வேகத்திற்கு மேல் தொடர்ந்து அனைத்து பந்துகளை வீசும் திறன் படைத்த மயங்க் யாதவ், வருங்காலத்தில் நிச்சயம் பும்ராவின் இடத்தை நிரப்ப சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்றும் கருதப்படுகிறது. இதற்கிடையே வங்கதேச அணிக்கு எதிராக சர்வதேச அரங்கில் முதல் ஓவரையே மெய்டனாக வீசி பலரையும் வியக்க வைத்திருந்தார் மயங்க் யாதவ்.

தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி விக்கெட் எடுத்திருந்த மயங்க் யாதவ், அதி வேகமாக பந்து வீசுவதுடன் மட்டுமில்லாமல் மிக டெக்னிக்கலாக நிறைய வேறுபாடுகளையும் தனது பந்துவீச்சில் வெளிப்படுத்தி வருகிறார். அடுத்த போட்டியிலும் நிச்சயம் மயங்க் யாதவிற்கு வாய்ப்பு கிடைத்து இன்னும் தனது திறனை முழுமையாக வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளில் இறங்குவார் என்றும் தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் டி20 போட்டியில் தான் வீசிய 26 வது பந்திலேயே நோ பாலாக மயங்க் யாதவ் வீசியிருந்தார். ஆனால் அதே நேரத்தில் இவரை தற்போது புவனேஸ்வர் குமாருடன் ஒப்பிட்டு சில கருத்துக்களை ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு காரணம் டி20 சர்வதேச போட்டிகளில் 1791 பந்துகளை (ஏறக்குறைய 299 ஓவர்கள்) வீசி உள்ள புவனேஸ்வர் குமார், ஒரு நோ பாலை கூட இதுவரை வீசியது கிடையாது. ஆனால் இளம் வீரரான மயங்க் யாதவ் 26 பந்துகளிலேயே தனது முதல் நோபாலை டி20 அரங்கில் வீசி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பீடு தேவை இல்லாத ஒன்று என பலரும் தெரிவித்தாலும் புவனேஸ்வர் குமாரின் திறனையும் நிச்சயம் நம்மால் மறுக்க முடியாது.