இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் 84 நாட்கள் சேவை செல்லுபடியாகும் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை OTT சலுகைகளுடன் வழங்குகிறது. இந்த ஐந்து திட்டங்களின் விலை ₹979 முதல் ₹1798 வரை வேறுபடுகிறது. இதில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் லைட், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம், மற்றும் ஜியோஹாட்ஸ்டார்போன்ற OTT சலுகைகளை இந்த திட்டங்களுடன் பெறலாம். இந்தத் திட்டங்களின் விலை மற்றும் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
1. ஏர்டெல் ₹979 திட்டம்:
பாரதி ஏர்டெல் வழங்கும் ₹979 திட்டம் தினசரி 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். இந்த திட்டத்துடன் ஏர்டெல் வழங்கும் மற்ற சலுகைகள்:
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22+ OTTகள் ஒரே லாகின் மூலம்)
அன்லிமிடெட் 5G டேட்டா
ரிவார்ட்ஸ்மினி (RewardsMini) சந்தா
இலவச ஹெலோட்யூன்ஸ் (Hellotunes)
பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ AI (Perplexity Pro AI) சந்தா
2. ஏர்டெல் ₹1029 திட்டம்:
பாரதி ஏர்டெல் வழங்கும் ₹1029 திட்டம் தினசரி 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் OTT சலுகைகள் உள்ளன. இதன் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள்:
மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile)
எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே இலவச அடுக்கு அணுகல் (Xstream Play Free tier access)
ரிவார்ட்ஸ்மினி சந்தா
பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ AI சந்தா
அன்லிமிடெட் 5G டேட்டா
3. ஏர்டெல் ₹1199 திட்டம்:
பாரதி ஏர்டெல் வழங்கும் ₹1199 திட்டம் தினசரி 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டம் 84 நாட்கள் சேவை செல்லுபடியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் சலுகைகள்:
அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite)
அன்லிமிடெட் 5G டேட்டா
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
ரிவார்ட்ஸ்மினி
பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ AI
4. ஏர்டெல் ₹1729 திட்டம்:
ஏர்டெல் வழங்கும் ₹1729 திட்டம் தினசரி 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங், தினசரி 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். இதன் சலுகைகள்:
நெட்ஃபிக்ஸ் பேசிக் (Netflix Basic)
ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super)
பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ AI
ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium)
எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
அன்லிமிடெட் 5G டேட்டா
5. ஏர்டெல் ₹1798 திட்டம்:
பாரதி ஏர்டெல் வழங்கும் ₹1798 திட்டம் தினசரி 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங், மற்றும் தினசரி 100 SMS ஆகியவற்றை 84 நாட்களுக்கு வழங்குகிறது. மற்ற சலுகைகள்:
நெட்ஃபிக்ஸ் பேசிக்
அன்லிமிடெட் 5G டேட்டா
எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்
பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ AI
ஓடிடிக்கு என தனியாக பணம் செலுத்தாமல், மேற்கண்ட திட்டங்களில் ஒன்றை ஏர்டெல் பயனர்கள் ரீசார்ஜ் செய்து கொண்டு பயனடையலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
