எல்லோரும் மலேசியாவில் நடந்தது ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்சுன்னு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க.. மலேசியாவை அதிர வைத்த என்னால் தமிழகத்தை அதிர வைப்பது ஒரு மேட்டரே இல்லைன்னு விஜய்யின் மறைமுக செய்தி தான் இந்த நிகழ்வு.. விஜய் ஒரு நிகழ்ச்சியையோ, பொதுகூட்டமோ நடத்தும்போது அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் எந்த அளவுக்கு கூட்டம் வரும் என்பதை நிரூபித்த கூட்டம்.. விஜய்யை சாதாரண ஒரு நடிகனாக நினைப்பவர்களுக்கு கொடுத்த அலாரம்..!

மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிசம்பர் 27 அன்று நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வெறும் சினிமா நிகழ்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. இது விஜய்யின் அரசியல் பலத்தை உலகிற்கு பறைசாற்றும் ஒரு…

vijay 2

மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிசம்பர் 27 அன்று நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வெறும் சினிமா நிகழ்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. இது விஜய்யின் அரசியல் பலத்தை உலகிற்கு பறைசாற்றும் ஒரு வலிமையின் காட்சியாகவே அமைந்தது. 100,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்ட இந்த நிகழ்வு, மலேசிய சாதன புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அங்கிருந்த கூட்டத்தையும், உற்சாகத்தையும் கவனித்த அரசியல் நோக்கர்கள், இது வெறும் ஆடியோ லான்ச் அல்ல, தமிழக அரசியலில் தான் ஏற்படுத்தப்போகும் அதிர்வலைகளுக்கான ஒரு முன்னோட்டம் என்பதை விஜய் மறைமுகமாக உணர்த்தியிருப்பதாக கருதுகின்றனர்.

மலேசிய அரசு மற்றும் காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், இந்த நிகழ்வு இவ்வளவு பிரம்மாண்டமாக நடந்தது விஜய்யின் நிர்வாக திறமைக்கு சான்றாக உள்ளது. அரசியல் பேசக்கூடாது, கட்சி கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், விஜய்யின் வருகை அந்த தடைகளை எல்லாம் மீறி ஒரு அரசியல் மாநாட்டிற்குரிய எழுச்சியை ஏற்படுத்தியது. “மலேசியாவிலேயே என்னால் இத்தனை லட்சம் மக்களை திரட்ட முடியுமென்றால், எனது சொந்த மண்ணான தமிழகத்தில் நான் நினைத்தால் எத்தகைய மாற்றத்தை உருவாக்க முடியும்?” என்ற மௌனமான கேள்வியை இந்த நிகழ்வின் மூலம் அவர் பிரதான கட்சிகளுக்கு முன்வைத்துள்ளார்.

இந்த விழாவில் விஜய் ஆற்றிய உரை, ரசிகர்களை கண்ணீரில் நனைய வைத்ததுடன், அரசியல் களத்தில் ஒரு தெளிவான செய்தியையும் பதிவு செய்தது. “உங்களுக்காக நான் சினிமாவையே விட்டுக்கொடுக்கத் தயார்” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது, அவர் முழுநேர அரசியலுக்கு திரும்புவதை உறுதிப்படுத்தியது. “வெற்றி பெற ஒரு நண்பன் மட்டும் போதாது, ஒரு பலமான எதிரியும் தேவை” என்று அவர் குறிப்பிட்ட ‘குட்டி ஸ்டோரி’, நேரடியாக தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சியை நோக்கி வீசப்பட்ட அம்பு என்றே பலரால் பார்க்கப்படுகிறது. சாதாரண நடிகனாக தன்னை நினைப்பவர்களுக்கு இது ஒரு அபாயச்சங்கு என்பதை அவர் செயலில் நிரூபித்து காட்டியுள்ளார்.

தமிழகத்தில் அவர் பொதுக்கூட்டங்களோ அல்லது மாநாடுகளோ நடத்தும்போது அரசு தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகள் போடுவதாக புகார்கள் எழும் நிலையில், மலேசியாவில் ஒரு அயல்நாட்டு அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் எந்த அளவுக்கு அவரால் மக்கள் சக்தியை திரட்ட முடியும் என்பதை இந்த விழா படம்பிடித்து காட்டியுள்ளது. இது தமிழக அரசுக்கும், காவல்துறையினருக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. தனது ரசிகர் மன்றத்தை ஒரு கட்டுக்கோப்பான அரசியல் படையாக மாற்றியிருப்பதை, கடல்கடந்து அவர் நிகழ்த்திய இந்த சாதனை உறுதிப்படுத்துகிறது.

சினிமாவின் ‘கடைசி அத்தியாயம்’ என்று வர்ணிக்கப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் இந்த வெற்றி விழா, விஜய்யின் அரசியல் வாழ்வின் ‘முதல் அத்தியாயம்’ ஆகும். அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற முன்னணி இயக்குநர்கள் முன்னிலையில், அவர் ஒரு ‘ஜனநாயக நாயகனாக’ உருவெடுத்தது, வரவிருக்கும் 2026 தேர்தலுக்கான மிகப்பெரிய உத்வேகத்தை அவரது தொண்டர்களுக்கு அளித்துள்ளது. விஜய்யை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்கள் மற்றும் அவரது அரசியல் வருகையை அலட்சியப்படுத்துபவர்கள், மலேசியாவில் திரண்ட அந்த தலைக்கட்டுகளை எண்ணிப்பார்த்து தங்கள் வியூகங்களை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா என்பது திரையுலகின் ஒரு சாதனை நிகழ்வு மட்டுமல்ல, அது தமிழக அரசியலின் திசையை மாற்றப்போகும் ஒரு சமிக்ஞை. மலேசியாவை அதிரவைத்த அந்த பேரலை, இன்னும் சில மாதங்களில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் எதிரொலிக்க போகிறது. ஒரு நடிகனாக தனது பயணத்தை முடித்துக்கொண்டு, ஒரு மக்கள் தலைவனாக அவர் அடியெடுத்து வைப்பதை உலகம் வியப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறது. 2026 தேர்தல் களம் இனி முன்பைப் போல இருக்காது என்பதற்கு இந்த மலேசிய திருவிழாவே சாட்சி.