இந்தியாவைப் பொருத்தவரை ஐடி ஊழியர்கள் தான் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதும் பலர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே தான் தற்கால இளைஞர்களிடம் யாரை கேட்டாலும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவதாக கூறி வருகின்றனர். ஆனால் பெங்களூரு நகரத்தில் ஐடி ஊழியர்களை விட ஸ்விக்கி, ஜொமைட்டோ உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் அதிகமாக சம்பாதிப்பதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் மாதம் 50 ஆயிரம் முதல் வரை உணவு டெலிவரி செய்வதன் மூலம் சம்பாதிப்பதாகவும் 20 ஆயிரம் ஊதியம் மற்றும் சில சலுகைகளை சேர்த்தால் 50 ஆயிரம் மிக எளிதில் சம்பாதிக்கலாம் என்று இளைஞர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் பகுதி நேரமாக உணவு டெலிவரி வேலை செய்யும் இளைஞர்கள் மாதம் 20 ஆயிரம் முதல் 30,000 வரை சம்பாதித்து வருவதாகவும் ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் வேலை செய்தால் மிக எளிதாக ஐம்பதாயிரம் சம்பாதித்து விடலாம் என்றும் பெங்களூரில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் தங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் இதனை பார்க்கும்போது ஐடி ஊழியர்களை விட அவர்கள் அதிகம் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஐடி ஊழியர்களுக்கு உள்ள மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் இந்த வேலையில் கிடையாது என்றும் டிராபிக் என்ற ஒரே ஒரு பிரச்சனையை மட்டும் தான் நாங்கள் சந்திக்கிறோம் என்றும் அதிலும் இரவில் டெலிவரி செய்யும் வேலை பார்த்தால் அந்த பிரச்சனையும் இருக்காது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலான ஐடி ஊழியர்களுக்கு 30,000 ஆயிரம் வரை பெங்களூரில் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது என்பதும் பெரிய பொசிஷனில் இருப்பவர்களுக்கு மட்டுமே லட்சக்கணக்கில் வருவதாகவும் அதை ஒப்பிடும்போது ஸ்விக்கி, ஜொமைட்டோ உணவு டெலிவரிமேன்கள் அதிகம் சம்பாதித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஒரே ஒரு பைக் மட்டும் பெட்ரோல் ஆகிய மட்டும்தான் தங்களுக்கு செலவு என்றும் ஜாலியான மற்றும் நிம்மதியான வேலை என்றும் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து இருக்காமல் பல இடங்களுக்கு சுற்றி பல்வேறு மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் நல்லது கெட்டது என்ன பலவித அனுபவங்கள் கிடைத்து வருவதாகவும் ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.