ஒரே ஒரு பார்கோடு போதும்.. மெட்ரோ ரயில் வரலாற்றை அறியலாம்.. புதிய அறிவிப்பு..!

By Bala Siva

Published:

ஒரே ஒரு பார் கோடு ஸ்கேன் செய்தால் மெட்ரோ ரயில் மொத்த வரலாற்றையும் அறிந்து கொள்ளலாம் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெங்களூரில் கடந்த சில ஆண்டுகளாக மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் பர்ப்பிள் மற்றும் கிரீன் பாதையில் செல்லும் ரயில்கள் பயணிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தற்போது ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய க்யூஆர் கோடு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பர்பிள் மற்றும் கிரீன் லைனில் பயணம் செய்யும் பயணிகள் இந்த பார்கோடை ரயிலில் இருந்தே ஸ்கேன் செய்து பெங்களூரில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் சிஸ்டத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளலாம். புதிதாக பெங்களூர் வருபவர்களுக்கு எந்தெந்த மெட்ரோ ஸ்டேஷனுக்கு எப்படி செல்ல வேண்டும்? எந்த லைன் எங்கிருந்து எது வரை செல்கிறது? மெட்ரோ ரயில் ஸ்டேஷன்களின் பெயர்கள் என்ன? க்ரீன் லைனில் இருந்து பர்ப்பிள் லைனுக்கு மாறுவதற்கு எங்கே இறங்க வேண்டும்? அனைத்து ரயில்வே நிலையங்களின் லொகேஷன் மற்றும் பெங்களூரு பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து எப்படி செல்ல வேண்டும்? போன்ற அனைத்து வழிகாட்டிகளும் ஒரே ஒரு பார் கோடை ஸ்கேன் செய்தால் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் வெளியூரிலிருந்து வரும் பயணிகளுக்கும் இது பேருதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வசதியை பயணிகள் பயன்படுத்தலாம் என்று அனைத்து மெட்ரோ ரயில் பெட்டிகளிலும் இந்த பார் கோடு இருக்கும் என்றும் பயணிகளுக்கு  என்று மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரை போல் சென்னைக்கு உட்பட அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.