வங்கிகள் மட்டுமல்ல.. போஸ்ட் ஆபீசிலும் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை..!

By Bala Siva

Published:

 

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அபராத தொகை பிடிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களும் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால் அதிலும் அபராத தொகை வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக, போஸ்ட் ஆபீஸ்களில் ஆர்டி போடுபவர்கள் சேமிப்பு கணக்கை ஒன்றை தொடங்க வேண்டும். சேமிப்பு கணக்கு இருந்தால் தான் ஆர்டியில் போட்ட தொகை முதிர்வின் போது சேமிப்பு கணக்குக்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் 500 ரூபாய் என்று போஸ்ட் ஆபீஸ் நிர்ணயம் செய்துள்ளது. பெரும்பாலானோர் இந்த போஸ்ட் ஆபீஸ் கணக்கில் உள்ள மினிமம் பேலன்ஸை மெய்ண்டென் செய்வதில்லை. அதன் காரணமாக, வங்கிகள் போலவே போஸ்ட் ஆபீஸில் மினிமம் பேலன்ஸ் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால், அவரது தொகை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

போஸ்ட் ஆபீஸில் இருந்து மினிமம் பேலன்ஸ் குறித்த மெசேஜ் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட கிளைக்கு சென்று தங்கள் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு அந்த கணக்கு தேவைப்படாத பட்சத்தில் அதை க்ளோஸ் செய்து விட்டு வந்து விடலாம்.

சேமிப்பு கணக்கை க்ளோஸ் செய்யாமல், மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருந்தால், அதில் அபராதம் மற்றும் அதற்கான வட்டி அதிகரித்துக் கொண்டே வரும் என்பதும், என்றாவது ஒருநாள் அதில் உங்கள் கணக்கிற்கு பணம் வந்தால், அந்த தொகை முழுவதும் கழிக்கப்பட்டுவிடும்  என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே, மினிமம் பேலன்ஸ் முறையாக பராமரிக்கப்படாத  கணக்குகளை முதல் வேலையாக க்ளோஸ் செய்து விட்டது நல்லது.