தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் உள்ளிட்ட மதங்களின் முக்கிய பண்டிகைகள் வரும் போது வங்கிகள் விடுமுறை அளிக்கப்படும் என்பது தெரிந்தது. அந்த வகையில் நாளை இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் நாளை வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியல் இதோ:
திரிபுரா
மிசோரம்
மகாராஷ்டிரா
கர்நாடகா
மத்திய பிரதேசம்
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம் (ஹைதராபாத்)
தெலுங்கானா (ஹைதராபாத்)
ராஜஸ்தான்
ஜம்மு
உத்தரப்பிரதேசம்
மேற்கு வங்காளம்
புது தில்லி
பாட்னா
சத்தீஸ்கர்
ஜார்கண்ட்
மேகாலயா
ஹிமாச்சல பிரதேசம்
வங்கிகள் விடுமுறை என்பதால் வங்கிகளின் பண பரிவர்த்தனை உட்பட அனைத்து பணிகளும் இருக்காது என்றும் ஆனால் அதே நேரத்தில் மொபைல் வங்கி, இன்டர்நெட் வங்கி மற்றும் ஏடிஎம் செயல்பாடுகள் வழக்கம் போல் இருக்கும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை மொகரம் பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவை நாளை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.