தெரிந்துதான் வாங்குகிறார்கள்.. கிரெடிட் கார்டு பாக்கி மீது வங்கிகள் 30 சதவீத வட்டி வசூலிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: கிரெட்டி கார்டு (கடன் அட்டை) மூலம் பரிமாற்றம் செய்த தொகையை கிரெடிட் கார்டு வழங்கிய வங்கிக்கு செலுத்துவதில் பாக்கி வைப்பவர்களிடம் ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை…

Banks can charge 30 percent interest on credit card balances: Supreme Court rules

டெல்லி: கிரெட்டி கார்டு (கடன் அட்டை) மூலம் பரிமாற்றம் செய்த தொகையை கிரெடிட் கார்டு வழங்கிய வங்கிக்கு செலுத்துவதில் பாக்கி வைப்பவர்களிடம் ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தெரிந்து தான் கிரெடிட் கார்டில் கடன் வாங்குகிறார்கள் என்பதால் கிரெடிட் கார்டு பாக்கி மீது ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேல், வட்டி வசூலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கிரெட்டி கார்டு (கடன் அட்டை) மூலம் பரிமாற்றம் செய்த தொகையை கிரெடிட் கார்டு வழங்கிய வங்கிக்கு செலுத்துவதில் பாக்கி வைப்பவர்களிடம் ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டி வசூலிக்கப்படுகிறது.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், 36 சதவீதம் முதல் 49 சதவீதம்வரை வட்டி வசூலிப்பது மிகவும் அதிகம், இது வாடிக்கையாளர்களிடம் சுரண்டுவதை போன்றது, நியாயமற்ற வர்த்தக நடவடிக்கை என்று கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து, சிட்டிபேங்க், எச்.எஸ்.பி.சி. உள்ளிட்ட வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்தநிலையில், 16 ஆண்டுகளுக்கு முந்தைய தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிரெடிட் கார்டுகள் தொடர்பாக அளித்த தீர்ப்பு விவரம்:

தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்துக்கு நியாயமற்ற ஒப்பந்தங்களையும், தன்னிச்சையாக அறிவிக்கப்படும் நிபந்தனைகளையும் ரத்து செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால், வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது. எனவே, அதில் தலையிட நுகர்வோர் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது.

30 சதவீதத்துக்கு மேல், வட்டி வசூலிப்பது நியாயமற்ற செயல் என்று ஆணையம் சொன்னது சட்ட விரோதம். அது, ரிசர்வ் வங்கி அதிகாரத்தில் குறுக்கிடும் செயல். மேலும், 1949-ம் ஆண்டின் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் நோக்கத்துக்கு முரணாக உள்ளது. கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், நன்கு படித்தவர்கள். உரிய நேரத்தில் பணம் செலுத்த வேண்டும், தாமதம் ஏற்பட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்று தங்கள் கடமைகளையும், உரிமைகளையும் அறிந்தவர்கள் ஆவார். கிரெடிட் கார்டு அளிக்கும்போது, வட்டி விகிதம் உள்ளிட்ட மிக முக்கியமான நிபந்தனைகளும், விதிமுறைகளும் அவர்களுக்கு சொல்லப்படுகின்றன. அவர்களும் வெளிப்படையாக சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

இருதரப்பும் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை மாற்றி அமைக்க நுகர்வோர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, வட்டி விகிதத்தை ஆய்வு செய்வதை நுகர்வோர் ஆணையம் தவிர்த்து இருக்கலாம். ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக எந்த வங்கியும் செயல்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது. ஆகவே வட்டிக்கு உச்சவரம்பு நிர்ணயிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட முடியாது. கிரெடிட் கார்டு பாக்கிக்கு வங்கிகள் 30 சதவீதத்துக்கு மேல், வட்டி வசூலிக்கலாம்” இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.