Skip to content
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழகம்
  • பொழுதுபோக்கு
டிசம்பர் 06, 2025
Tamil Minutes

Tamil Minutes

Tamil News online
Tamil Minutes
  • ஹோம்
  • செய்திகள்
  • பொழுதுபோக்கு
  • வெப் ஸ்டோரி
Tamil Minutes
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • வாழ்க்கை முறை
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
  • .
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • அழகுக் குறிப்புகள்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
  • கல்வி
  • சமையல்
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • ஜோதிடம்
Tamil Minutes
  • செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • தொழில்நுட்பம்
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • வாழ்க்கை முறை
  • சமையல்
  • உடல்நலம்
  • அழகுக் குறிப்புகள்
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
Home » news » bank server hacked and robbery without login and otp
செய்திகள்

லாகின் இல்லை.. ஓடிபி இல்லை.. வங்கியில் நூதனமாக பறிபோன ரூ.16.50 கோடி..!

லாகின் ஐடி, பாஸ்வேர்ட் இல்லாமல், ஓடிபி இல்லாமல், வங்கியின் சர்வரை ஹேக் செய்து 16 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. வங்கியில் பணம் போட்டு வைப்பது பாதுகாப்பானது…

Author Avatar

Bala Siva

ஜூலை 17, 2024, 09:239:23 காலை banklogin idpassword
bank account

லாகின் ஐடி, பாஸ்வேர்ட் இல்லாமல், ஓடிபி இல்லாமல், வங்கியின் சர்வரை ஹேக் செய்து 16 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

வங்கியில் பணம் போட்டு வைப்பது பாதுகாப்பானது என்று கூறப்படும் நிலையில் போலியான நபர்கள் வங்கி வாடிக்கையாளர்களிடம் போன் செய்து ஓடிபிகளை பெற்று வங்கி கணக்கிலிருந்து மோசடியாக பணத்தை எடுத்து வருவது குறித்த வழக்குகள் நாடு முழுவதும் ஏராளமாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு பதிலாக நேரடியாக வங்கியை ஏமாற்றி பணம் மோசடி செய்து விடலாம் என்ற ஒரு நூதன மோசடி உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியில் உள்ள வங்கியின் சர்வர் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த வங்கியில் இருந்து 89 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 16.5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் வங்கி மேனேஜரின் லாகின் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் வங்கி இணையதளத்தில் நுழைந்து பல்வேறு நபர்களை வங்கி கணக்குகளில் இருந்து 89 வெவ்வேறு வங்கி கணக்குக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

லாகின் ஐடி, பாஸ்வேர்ட் இல்லாமல் ஓடிபி இல்லாமல் வங்கியின் சர்வரை ஹேக் செய்து கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Bala Siva
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

தொடர்புடைய போஸ்ட்

vijay nanjil

சொன்னபடியே 10 பேரை அழைத்து வந்த செங்கோட்டையன்.. தவெக காட்டில் மழை.. ஃபில்டர் செய்வது மட்டும் தான் விஜய் வேலை.. இனி திராவிட கட்சிகள் தேறாது.. விஜய் தான் வெற்றி முகம்.. நாஞ்சில் சம்பத்தை அடுத்து தவெகவில் இணைவது யார் யார்?

By Bala Siva டிசம்பர் 5, 2025, 19:41
#ट्रेंडिंग हैशटैग:banklogin idpassword

Post navigation

Previous Previous post: கலெக்டர் அலுவலகத்தில் திடீரென ஆடையை களைந்த பெண்கள்.. அதிர்ச்சியில் போலீசார்..!
Next Next post: உலக Emoji தினம்: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் இதோ…

District News

.

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Facebook
  • X
  • YouTube
  • Threads
  • Pinterest
  • LinkedIn
© Copyright All right reserved By Tamil Minutes WordPress Powered By