பெங்களூரை சேர்ந்த மீனாட்சி என்ற 53 வயது பெண். வங்கியில் மூன்று கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்த நிலையில், அந்த பணத்தை வங்கியில் உள்ள ஊழியர் ஒருவர் போலியான வங்கி அக்கவுண்டுகளுக்கு மாற்றி, அதன் பின் தன்னுடைய கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிக்சட் செய்த பணத்தை ரத்து செய்தது குறித்து எந்தவிதமான எஸ்.எம்.எஸ் மற்றும் ஈமெயில் தனக்கு வரவில்லை என்றும், பிக்சட் டெபாசிட்டை வேறு கணக்குக்கு மாற்ற, தான் எந்தவித அனுமதியும் கொடுக்கவில்லை என்றும், தன்னுடைய கவனத்திற்கு வராமல் போலியான கணக்குகளுக்கு தன்னுடைய பணம் மாற்றப்பட்டுள்ளது என்றும் மீனாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதி வங்கி ஊழியர்களிடம் சரமாரியான கேள்வி கேட்டார். ஒரு இந்திய பிரஜை முழுமையாக நம்புவது வங்கி தான்; ஆனால், அந்த வங்கியில் உள்ள ஊழியர்களே மோசடி செய்வதும், நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதும் எந்த மாதிரியான நியாயம் என கேள்வி எழுப்பினார். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊழியரை கைது செய்யவும், தீவிரமாக விசாரணை செய்து பணத்தை வாடிக்கையாளருக்கு திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.