simultaneous நாமினி நியமனம் என்பது வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்தால், அவருடைய சொத்து அவர் யாரை யாருக்கெல்லாம் நாமினியாக பதிவு செய்துள்ளாரோ, எத்தனை சதவீதம் பதிவு செய்துள்ளாரோ, அந்த தொகைகள் அவரவருக்கே வழங்கப்படும்.
உதாரணமாக, ஒருவர் 10 லட்சம் ரூபாய் தனது வங்கி கணக்கில் வைத்திருந்தால், அவர் தனது மனைவி, மகன், மகள் ஆகிய மூன்று பேரையும் நாமினியாக நியமித்திருப்பதாகக் கொள்ளலாம். அவர்கள் முறையே 40%, 30%, 30% என்ற விதத்தில் நாமினியாக உள்ளனர் என்றால், அவரது மரணத்திற்குப் பிறகு மனைவிக்கு 4 லட்சம், மகனுக்கு 3 லட்சம், மகளுக்கு 3 லட்சம் வழங்கப்படும்.
அடுத்ததாக, successive நாமினி முறை என்றால் என்ன? இதில் ஒரே நேரத்தில் மூன்று நபர்களை நாமினியாக நியமனம் செய்யலாம். முதல் நபர் உரிமை பெற முடியாத பட்சத்தில், இரண்டாவது நபருக்கும், இரண்டாவது நபர் பெற முடியாத பட்சத்தில், மூன்றாவது நபருக்கும் அந்த பணம் வழங்கப்படும்.
உதாரணமாக, A, B, C என மூன்று நபர்களை நாமினியாக நியமித்திருந்தால், முதலில் A அவருக்கு பணம் வழங்கப்படும். அவர் பெற முடியாத சூழல் இருந்தால், Bக்கு வழங்கப்படும். அவரும் பெற முடியாத சூழ்நிலை இருந்தால், Cக்கு வழங்கப்படும். இந்த முறையில், நாமினியாக நியமிக்கப்பட்டவர் இறந்தாலும், எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த விவகாரம் முடிவு செய்யப்படும்.
அதிகபட்சமாக நான்கு நாமினிகளை வைத்துக் கொள்ளலாம் என்ற புதிய விதிமுறை, வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என கருதப்படுகிறது.