அமெரிக்க ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த 1000 இந்தியர்கள் வேலையிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

By Bala Siva

Published:

கடந்த சில மாதங்களாக கூகுள் உள்பட பெரிய நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில் அந்நிறுவனத்தில் ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதை அடுத்து வேலை செய்து வர ஆயிரம் இந்திய ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த ஐடி நிறுவனங்களில் ஒன்று ஆக்ஸ்ட்ரியா இன்க். இந்நிறுவனம் இந்தியாவில் குருகிராம், நொய்டா, பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார மந்த நிலை மற்றும் மாறிவரும் வணிகத் தேவைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும் ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் டேட்டா சயின்ஸ், சாப்ட்வேர் பொறியாளர் போன்ற பணிகளுக்கு கூடுதலாக ஆயிரம் ஊழியர்களை பணியாமர்த்த போவதாகவும் இன்னும் 8 முதல் 10 மாதங்களில் இந்த பணியமர்த்தும் நடவடிக்கை இருக்கும் என்றும் ஆக்ஸ்ட்ரியா இன்க் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக மெட்டா, ட்விட்டர், வால்ட் டிஸ்னி, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நிறுவனம் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து உள்ளது என்பதும் இதனால் ஆயிரம் இந்திய ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே AI தொழில்நுட்பம் காரணமாக ஏராளமானோர் வேலை நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் பொருளாதார மந்த நிலை, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களையும் காட்டி தொடர்ந்து வேலை நீக்கம் செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.