நண்பேன்டா… அஜித் ஒரே ஒரு வாழ்த்து சொன்னால் போதும்.. விஜய் தான் முதல்வர்.. 2029ல் அஜித் அரசியலுக்கு வருவார்.. ஜோதிடர் சதீஷ் ராவ்

விஜய்யின் அரசியலுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அஜித் ஒரே ஒரு ட்வீட் போட்டால் போதும், 2026 இல் விஜய் தான் முதல்வர் என்றும், அதுமட்டுமன்றி அஜித் 2029 ஆம் ஆண்டுக்கு பின் அஜித் அரசியலுக்கு…

ajith vijay

விஜய்யின் அரசியலுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அஜித் ஒரே ஒரு ட்வீட் போட்டால் போதும், 2026 இல் விஜய் தான் முதல்வர் என்றும், அதுமட்டுமன்றி அஜித் 2029 ஆம் ஆண்டுக்கு பின் அஜித் அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவரது ஜாதகம் சொல்கிறது என்றும் பிரபல ஜோதிடர் சதீஷ் ராவ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் எப்படி இருக்கும் என யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சதீஷ் ராவ், தெரிந்தோ தெரியாமலோ விஜய், திமுகவுக்கு சாதகமாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்றும், அவர் திமுகவுக்கு எதிரான வாக்குகளை அதிகமாக பிரிப்பதால் திமுகவுக்கு சாதகம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், அதே நேரத்தில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்தால், அந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், விஜய்க்கும் ஒரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், விஜய்யுடன் சில முக்கிய கட்சிகள் கூட்டணி சேர்ந்தால், அந்த கூட்டணியும் வெற்றி பெறும் என்றும், ஆனால் தனித்து போட்டியிட்டால் அவரால் முதலமைச்சராக முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், விஜய்க்கு வெளிப்படையாக பெரிய நடிகர்கள் யாரும் இதுவரை கருத்து சொல்லவில்லை என்றும், ஆளுங்கட்சியை பகைத்து கொள்ள பெரிய நடிகர்கள் தயங்குவார்கள் என்றும், ரஜினிகாந்த், அஜித் ஆகியோர் விஜய்யின் அரசியல் நகர்வை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறார்கள் தவிர, ஒரு ட்வீட் கூட போடவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், அதே நேரத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால், அஜித்ம் விஜய்க்கு கடைசி நேரத்தில் ஆதரவு கொடுக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது என்றும், அவர் மட்டும் சமூக வலைதளம் மூலம் விஜய்க்கு ஒரே ஒரு வாழ்த்து மட்டும் சொன்னால் போதும், ஒட்டுமொத்தமாக அஜித் ரசிகர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்றும், விஜய் தான் 2026 முதல்வர் ஆவார் என்றும் தெரிவித்தார்.

மேலும், அஜித்தின் ஜாதகத்தை பொருத்தவரை 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியலுக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், ஒரு பெரிய கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் ஜாதகத்தை பொருத்தவரை, விஜய்யால் அவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் சதீஷ் ராவ் கூறியுள்ளார்.

பிரபல ஜோதிடர் சதீஷ் ராவ் கூறியது எந்த அளவுக்கு உண்மையாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.