ஒரு டாக்டர் உங்களுடன் இருந்தால் எந்த அளவுக்கு உங்கள் உடல் நலம் பாதுகாப்புடன் இருக்குமோ அந்த அளவுக்கு ஆப்பிள் வாட்ச் வாங்கினால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்த நிலையில் இவை விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட் வாட்சில் ஏகப்பட்ட மருத்துவ வசதி இருப்பதால் தூக்கமின்மை முதல் இருதய நோய் வரை அனைத்து நோய்களையும் கண்டறியலாம் என்றும் இந்த வாட்ச் மட்டும் வாங்கினால் ஒரு டாக்டர் உங்கள் பக்கத்தில் இருப்பது போல் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் வாட்ச் என்பது வெறும் மணி பார்க்க மட்டும் இன்றி போன் பேச, மெசேஜ் அனுப்ப ,டாக்குமெண்ட் அனுப்ப மற்றும் உடல் நிலையை அறிந்து கொள்ள என பல வசதிகள் உள்ளது. இதில் இதய துடிப்பு உட்பட பல உடல் ஆரோக்கியம் சார்ந்த நலன்களையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் பெற்று வரலாம்.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் மற்ற ஸ்மார்ட் வாட்ச்களை விட அதிகமாகவே பயனர்களை கவர்ந்துள்ளது என்று கூறலாம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆபிள் வாட்ச் 10 சீரிஸில் தூக்கமின்மையை கண்டறியும் வகையில் Sleep Apnea என்ற அம்சம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆரோக்கியத்துக்கு தீங்களிக்கும் சுற்றுப்புற சூழலை கண்டறிந்து பயனர்களை அலர்ட் செய்யும் என்றும், இதயத் துடிப்பு சீராக இல்லையென்றால் அதை பயனர்களுக்கு தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. செப்டம்பர் 20ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த ஆப்பிள் வாட்ச் 10 சீரிஸ் ரூ.46,900 வரை கிடைக்கும்.