தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. அவரது உடல்நலப் பாதிப்பிற்குக் காரணம் குறித்து அரசியல் விமர்சகர்கள் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேநேரத்தில், ஆளும் திமுக அரசின் செயல்பாடுகள், கடன் சுமை, மற்றும் எதிர்வரும் தேர்தல் வியூகங்கள் குறித்தும் பல்வேறு கோணங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முதலமைச்சரின் உடல்நலமும் அரசியல் தாக்கமும்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சில உடல் உபாதைகள் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. அதோடு, அவரது அண்ணன் முக முத்து சமீபத்தில் மறைந்தது அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இவை இரண்டும் சேர்ந்து ஏற்பட்ட ஒரு லேசான தலைசுற்றலால் குடும்பத்தினர் பதட்டம் அடைந்திருக்கலாம். எதிர்வரும் தேர்தல் நெருங்கும் நிலையில், முதலமைச்சர் தனது பிரச்சாரத்தை இனிதான் முழு வீச்சில் தொடங்க வேண்டும். இந்த நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நலம் குன்றியிருப்பது சோதனை தான்.
திமுகவின் கூட்டணி கட்சிகள் அப்படியே இருந்தாலும் கூட ஆட்சி மீது உள்ள அதிருப்தி காரணமாக நக்கல் மீண்டும் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகம் தான் தீவிரமான கட்சி தொண்டர்கள் ஓட்டு போடுவார்கள் ஆனால் எந்த கட்சிகளும் சாராத மக்கள் கண்டிப்பாக ஓட்டு போட மாட்டார்கள் திமுகவை மட்டும் இன்றி அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து கண்டிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது எனவே முதல்வர் மு க ஸ்டாலின் மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்தால் மட்டுமே வெற்றியை நெருங்க முடியும் என்று கூறப்பட்டு வருகிறது ஆனால் அதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் போன்றோர் திமுகவில் சேரவில்லை. ஏனெனில் அவர்கள் எல்லாம் எம்ஜிஆரின் தீவிர தொண்டர்கள். அதிமுகவுக்கு விஸ்வாசமாக இருந்தவர்கள். அதிமுகவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவை எதிரியாக தான் பார்ப்பார்கள்.
அதேபோல் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து வெளியேறியதில் பிரச்சினையில்லை. ஆனால், அதிமுகவின் எதிரியாகக் கருதப்படும் திமுகவுடன் கைகோர்த்திருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாகப் பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் மாறலாம், ஆனால் ‘எதிரிக்கட்சி’ மாறக்கூடாது.
பாஜகவின் நிலைப்பாடும் எடப்பாடி பழனிசாமியும்
பாஜகவைப் பொறுத்தவரை, அடுத்த தமிழக முதல்வர் யார் என்பது அமித்ஷாவுக்கு தேவையில்லாத விஷயம். அதிமுகவிலிருந்துதான் ஒருவர் முதல்வர் ஆவார் என்பது அமித்ஷாவுக்கு நன்றாகத் தெரியும். அது எடப்பாடி பழனிசாமிதான் என்பது பாஜகவின் பரப்புரைகளிலும் உறுதிப்படுத்தப்படும். திமுகவுக்கு தோல்வி பயம் வந்ததால் அதிமுக – பாஜக கூட்டணியில் கல் எறிந்து குட்டையை குழப்ப பார்க்கின்றார்கள். அதிமுகவின் ‘செங்கலை’ உருவ முயற்சிக்கிறார்கள் என்றும், அதில் முதல் செங்கல் அன்வர் ராஜா’ என்றும் விமர்சிக்கப்படுகிறது.
கடன் சுமை: தமிழகத்தின் எதிர்காலம்?
தற்போதைய திமுக அரசு, இதுவரை நிறைவேற்றாத வாக்குறுதிகளை இந்த எஞ்சிய எட்டு மாதங்களில் நிறைவேற்ற வாய்ப்புள்ளது. கடனை வாங்கி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு, நாளைக்கு எந்த ஆட்சி வருகிறதோ அந்த ஆட்சியின் மீது கடனைச் சுமத்திவிட்டுப் போகலாம் என்று அவர்கள் நினைக்கலாம். இது தமிழக மக்கள் மீது மிகப்பெரிய கடன் சுமையை சுமத்திவிடும் ஆபத்து உள்ளது.
2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழ்நாட்டின் கடன் சுமார் 1.1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள். அதிலும் கடைசி 2 வருடங்கள் கொரோனா காலகட்டம் என்பதால் வருமானம் இல்லாமல் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 2021 இல் தமிழகத்தின் கடன் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆனால், தற்போது தமிழகத்தின் கடன் இருமடங்கு உயர்ந்துவிட்டது. மேலும், இன்னும் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தமாக 2026 ஆம் ஆண்டு இறுதியில் கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய் தமிழக மக்கள் மீது கடனைச் சுமத்திவிட்டுச் செல்லப் போகிறார்கள் என்ற விமர்சனம் வலுவாக உள்ளது. கடனை வாங்கி அரசு நடத்துவதற்கு எதற்கு ஒரு முதல்வர், எதற்கு ஒரு அரசு அதிகாரிகள், எதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்று மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
